பக்கம்:இலக்கியக் கேணி.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. பொன்னுர் மேனியன்

சுந்தரரும் திருமழபாடியும்

சுந்தரமூர்த்தி சுவாமிகள், தல யாத்திரையாகப் போகின்றவர், திருவையாறு திருப்பூந்துருத்தி முதலான பதிகளையடைந்து சிவபெருமானை வணங்கித் துதித்தார் : திருவாலம் பொழிலே யட்ைந்து வணங்கி அங்குத் துயில் கொள்ளுங்கால், அவருடைய கனவிலே சிவபிரான் எழுந்தருளி வந்து, ' மழபாடியின் கண் வருவதற்கு நினைக்க மறந்தனையோ ' என்று வினவித் தமது இளமை யாகிய திருக்கோலத்தைக் காட்டியருளச் சுந்தரர் துயி லுணர்ந்தெழுந்து காவிரியின் வடகரையில் ஏறிச் சென்று திருமழபாடியினை அணைந்தார் : திருக்கோயிலி னுட் சென்று இறைவனது அளக்கலாகாத கருணைத் திறத்தினைப் புகழ்ந்து, உள்ளமுருகிப் பொன்னர் மேனியனே' என்று தொடங்கி, அன்னே உன்னை யல்லால் இனி யாரை நினைக்கேனே' என்று துதித்துப் பதிகமாலையினைச் சாத்தினர்.

பதிகக் குறிப்பு

இப்பதிகம் பொன்னர் மேனியன் ' என்ற தொடக்கமுடையது : “ மழபாடியுள் மாணிக்கமே”

என்று ஒவ்வொரு பாட்டிலும் விளி பெற்றுள்ளது: 5 ஆவது பாடல் 'கண்ணுய், ஏழுலகும் கருத்தாய் அருத்தமுமாய்ப், பண்ணுர் இன்தமிழாய் ' என்று இறைவன் பெருமையை விளக்குவது. திருநாவுக்கரசர்,

பெரிய புராணம்-ஏயர்கோன் கலிக்காமர் - செ. 71-74,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கேணி.pdf/32&oldid=676727" இலிருந்து மீள்விக்கப்பட்டது