பக்கம்:இலக்கியக் கேணி.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 இலக்கியக்கேணி

பொருட் படுத்துவாரா? நூல் அரங்கேற்றம் இனிதே முடிவுற்றமைக்கு மகிழ்ந்தார்; வீடு திரும்பினர். அடியவர் தம் அல்லல் தீர்க்கும் அருமருந்து-தமிழால் வைதாரையும் வாழவைக்கும் அலைவாய்ப் பெருமான்வாளா விருப்பாரா ? பெருமானுக்குச் சாத்தப்பெற் றிருந்த மாணிக்க மாலை காணுமற் போயிற்று! இரவில் வெகு நேரம் கழித்தே கோயிலார் அறிந்தனர்; ஊரெங் கும் தேடினர். என்ன வியப்பு பகழிக் கூத்தர் கழுத் தில் அஃது அணியப்பட்டிருந்தது! புலவரை வணங்கினர். அவரைப் பல்லக்கில் வைத்து ஊர்வலம் செய்வித்துத் தக்க மரியாதைகள் செய்தனர்.

இவரியற்றிய வேறு நூல்: இவரியற்றிய வேறு நூல் சீவக சிந்தாமணிச் சுருக்கம் என்பது. இதன் முகப்பில் எழுதப்பட்டுள்ள குறிப்பில் செம்பி நாட்டுச் சன்னுசிக் கிராமத்துத் திருப்புல்லாணி மாலடியான் தர்ப்பாதனன் மகன் பகழிக் கூத்தன் வாக்கு என எழுதப்பட்டுள்ளது. இந்நூலினுள்ளே முதற்கண் விநாயக சுப்பிரமணிய ஸ்துதிகள் கூறப்பட்டிருத்தலோடு, சில இலம்பகங்களின் தொடக்கத்தே முருகக்கடவுளின் தோத்திரங்கள் தனித் தும் வருகின்றன. இதனால் பூரீ சுப்பிரமணிய பத்தியிற் சிறந்து விளங்கிய இப்பகழிக் கூத்தரே இச் சிந்தாமணிச் சுருக்கமும் பாடினவராதல் வேண்டும் என்று கருதத் தடை யில்லை - என்று திரு. மு. ராகவ ஐயங்கார் . அவர்கள் தமிழாராய்ச்சித் தொகுதியில் எழுதியுள்ளார்.

' இவர் காலம் இன்னதென்று துணியக்கூட வில்லே யேனும் திருப்புகழ் பாடிய அருணகிரி நாதர் காலத்தவராகச் சங்கித்தற்கு இடமுண்டு” என்பர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கேணி.pdf/39&oldid=676734" இலிருந்து மீள்விக்கப்பட்டது