பக்கம்:இலக்கியக் கேணி.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தண்ணீர்ப் பந்தல் 3

களைக் கூறுவது. அவற்றுள் ஒரு திருவிளையாடல் தன் ணிைர்ப் பந்தல் வைத்தது. அதில் கண்ட கதைச்சுருக்கம் வருமாறு :

மதுரை நகரில் இருந்து பாண்டி நாட்டை ஆண்ட மன்னர்களுள் இராசேந்திர பாண்டியன் ஒருவன். அவன் காலத்தில் காஞ்சிபுரத்தில் இருந்து சோழ நாட்டை ஆண் டவன் காடு வெட்டிய சோழன். அவனுக்கு மதுரைச் சொக்கேசரது வழிபாட்டில் பெரிதும் விருப்பம் உண்டு. அதற்காக இராசேந்திர பாண்டியனது நட்பை விரும்பி அவனுக்குக் கையுறைப் பொருள்கள் பலவற்றை அவன் அனுப்பின்ை. பாண்டியனும் சோழன் நட்பை விரும்பி ன்ை. இருவர் தொடர்பும் வலுப்பெற்று வளர்வ தாயிற்று.

பாண்டியனது குணங்லம் முதலியவற்றை நேரில் கண்டறிந்த சோழன், தன் மகளை அவனுக்கு மணம் செய்து கொடுக்க நினைத்தான்.

இதனையறிந்தான் இராசேந்திரனது தம்பி. அவன் எத்தகைய பழிச் செயலுக்கும் அஞ்சாதவன் : இராச சிம்மன் என்ற பெயரினன் ; தன் தமையனுக்கு மணம் பேசப் பெற்ற சோழன் மகளைத் தானே மணம் செய்து கொள்ளக் கருதினன் : காஞ்சி நகரத்தை யடைந்தான் : சோழனிடம் பொய்ம்மொழிகள் பல பேசிமணம் புரிந்து கொண்டான். ---

இராசசிம்மனுக்குப் பெண் கொடுத்த பின்னர்ப் பாண்டிய நாட்டு அரசுரிமை அவனுக்குக் கிடைக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கேணி.pdf/4&oldid=676699" இலிருந்து மீள்விக்கப்பட்டது