பக்கம்:இலக்கியக் கேணி.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. இலக்கியக்கேணி

வேண்டும் என்று சோழன் விரும்பின்ை: இராசேந்திரன் மீது போர் தொடுக்க எண்ணினன் : எண்ணில்லாத சேனைகளோடு மதுரைக்குப் புறத்தே வந்து தங்கிப் பாடிவீடு அமைத்துக் கொண்டான் ; போர்முரசு அறை வித்தான் ; முன்னெச்சரிக்கையோடு பெரும்படை திரட் டிப் போருக்கு வந்த சோழனைச் சிறு படையுடைய பாண்டியன் தடுத்துப் பொருதான்.

பேருழிக் காலத்தில் உலகு அனைத்தையும் அழிக் கின்ற பெருந்தீயைப் போலக் கதிரவன் கொதித்து கின்று. எரித்தான். தீயவரைச் சேர்ந்த நல்லவரும் தீயவரே ஆவார் என்னும் உண்மையை விளக்குவது போலக் கதிரவனின் வெப்பம் படிந்த காற்றும் நிலமும் அக்கதி ரவனைப் போலவே பெரு வெப்பத்தை மக்களுக்கு அளித்தன. போர் வீரர் அனைவரும், யானை குதிரை தேர் முதலியவற்றின் சிறு நிழலில் தங்கி வெயிலில் வெப் பத்தை ஆற்றிக் கொள்ள முயன்றனர். நீர் வேட்கை உண்டாகி அவர்களைப் பெரிதும் துன்புறுத்தியது.

அந்த வேளையில் சொக்கேசப் பெருமான் பாண்டி யன் படை நடுவில், நான்கு வேதங்களும் நான்கு கால்க ளாகப் பொருந்திய தண்ணிர்ப் பந்தல் வைத்தார்; அதன் கீழ் நீறணிந்த நெற்றியும், மலரணிந்த காதும், கிண்கிணி அணிந்த காலும் உடையராய்ப் புலித்தோல் உடுத்து, அகத்தேயுள்ள அருட்குறிப்புப் புறத்தே புன்முறுவலால் வெளிப்பட எழுந்தருளியிருந்து, சடையில் தரித்த கங்கை நீரை நிரப்பிய கெண்டி ஒன்றைத் தாங்கித் தண்ணீர் வார்த்து வீரர்களின் தாகத்தைத் தணித் தருளினர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கேணி.pdf/5&oldid=676700" இலிருந்து மீள்விக்கப்பட்டது