பக்கம்:இலக்கியக் கேணி.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 இலக்கியக்கேணி

அரசன் பெயர் குறிக்கப்படாத கல்வெட்டொன்றுண்டு. இக் கல்வெட்டு 1903 ஆம் ஆண்டுக்குரிய 152 எண் கொண்ட சாசனமாகத் தென்னிந்திய சாசனங்கள் VII வது பகுதியில் 440 எண் கொண்ட சாசனமாக வெளியிடப் பெற்றுள்ளது. இவ்வூர், திருமலை நாட்டுத் திருக்கொடுங்குன்றம் என்று குறிக்கப் பெற்றுள்ளது. இவ்வூர் அழகிய சிற்றம்பலமுடைய நாயனர் திருக் கோயிலும், திருக்குளமும், மடமும், திருமடைவிளாக மும் பதினெண் விஷையத்தார் ரrையாக இருந்தது. இக்கோயில் பெருமானுக்குத் திருப்படி மாற்றுக்கும், திருப்பணிக்கும், திருப்பரிவட்டம் திருமேற்பூச்சு மற்று. முள்ள நிபந்தனைகளுக்கும் ஆகச் சில வரிகளைக் கோயி லாரே வசூலித்துக் கொள்ளுமாறு திசை ஆயிரத்தைஞ் நூற்றுவரும் பதினெண் விஷையத்தாரும் உத்தரவு கொடுத்தார்கள். இத்தன்ம சாசனத்தில் கையெழுத்திட்ட பதினெண் விவுையத்தாருள் ஒருவர் பட்டமுடையார் ஆணை நமதென்ற பெருமாள் எனப்பெற்ருர்.

கல்லெழுத்தில் கண்ட பிற பெயர்கள்

கையெழுத்திட்டவர்களுள் இன்னொருவர் கோவி லூர் உடையார் சிவபத்தர்; மற்ருெருவர் உறத்துருடை யார் திருத்தொண்டத் தொகையுடையார் ; பின்னும் ஒருவர் அழிசிற் பாக்கமுடையார் பத்தர்க்கருள்செய்வார்;

இன்னும் ஒருவர் நாட்டார் பள்ளி யுடையார் திருநீறு பரப்பினர் என்பவர்.

பெயர் விளக்கம்

ஆணை நமதென்ற பெருமாள் என்பது திருஞான சம்பந்தரைக் குறிக்கும். சிவபக்தி மிக்குள்ளமையைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கேணி.pdf/55&oldid=676750" இலிருந்து மீள்விக்கப்பட்டது