பக்கம்:இலக்கியக் கேணி.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆணை கமதே 55

குறிப்பதாய் அமைந்தது சிவபக்தர் என்ற பெயர். திருத்தொண்டத்தொகை என்பது சுந்தரர் பாடிய திருப்பதிகங்களுள் ஒன்று ; சேக்கிழார் பெரியபுராணம் பாடுவதற்கு அடிப்படை நூலாயமைந்தது. அப் பதிகம் சிவனடியார்களைத் துதிக்கு முகத்தான் சிவபெருமானப் பாடியதாகலின் "திருத்தொண்டத் தொகையான்” என்பது சிவபெருமானைக் குறிக்கும். திருத்தொண்டத் தொகையைப் பாடிய காரணத்தான் சுந்தரரைக் குறிப் பதாகக் கொண்டாலும் அமையும். திருத்தொண்டத் தொகையின் பெயரால் குகை, திருமடம், கோயில் முதலியன பண்டைக் காலத்தில் அமைக்கப் பெற் றிருந்தன என்பதை இந்நூல் 8ஆம் கட்டுரையுட் காண்க.

முடிவுரை

இதுகாறும் கூறியவாற்ருன் ஆணை நமது' என்று கூறியவர் சம்பந்தர் என்பதும், அதனனே ஆணைநம தென்ற பெருமாள்' என்று சம்பந்தர் அழைக்கப் பெற்ருர் என்பதும் அறிகின்ருேம். பிற்காலச் சோழப் பேரரசு சிறப்புற்ற காலத்தில்-சமய மறுமலர்ச்சி ஏற் பட்ட காலத்தில்-மக்கள் சமயச் சார்பான பெயர்கள் பூண்டனர்; அப் பெயர்கள் தாமும் சமய குரவர் வரலாறுகளை நினைவூட்டுவனவாய் அமைந்தன. இச் செய்திகள் சமய அறிவு படைத்த தமிழ்ப்பெருமக்களுக்கு இன்பம் பயக்கும் என்பது உறுதி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கேணி.pdf/56&oldid=676751" இலிருந்து மீள்விக்கப்பட்டது