பக்கம்:இலக்கியக் கேணி.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தண்ணீர்ப் பந்தல் 5

தண்ணிர் அருந்தித் தாகம் தணிந்தனர் பாண்டிய :னது படைவீரர்கள். உடற்களைப்பு நீங்கி வலிய

போரைச் செய்தார்கள் : சோழன் படையும் புறங் கொடுத்து ஓடியது : இராசேந்திரனும் வாகை குடி

இங்ங்னம் இறைவனே தண்ணிர்ப்பந்தர் வைத்த செய்தியை மாணிக்கவாசகப் பெருமான், தண்ணிர்ப் பந்தர் சயம்பெற வைத்து, நன்னீர்ச் சேவகளுகிய நன்மையும் ' என்று கீர்த்தித் திருவகவலில் குறித்துள்

|ளார்கள்.

திருநாவுக்கரசர் தண்ணிர்ப் பந்தல்

திங்களுரில் இருந்த அப்பூதியடிகள், பொங்கு கடல் கன் மிதப்பில் போங்தேறிய திருநாவுக்கரசரின் திருத்தொண்டின் மேன்மையைக் கேட்டறிந்து, அவர் பெயரால் " படிநிகழ் மடங்கள் தண்ணிர்ப் பந்தர்கள் முதலாவுள்ள முடிவிலா அறங்கள் ' செய்து வாழ்ந்து வந்தர்ர். பல தலங்களையும் தரிசித்துக்கொண்டு திங்களுர் மருங்குவழி வந்த திருநாவுக்கரசர்,

அளவில் சனம் செலவொழியா வழிக்கரையில் அருளுடை உளம&னய தண்ணளித்தாய் உறுவேனிற்பரிவகற்றிக் (யார் குளநிறைந்த நீர்த்தடம்போல் குளிர்துங்கும் பரப்பினதாய் வளம்மருவு நிழல் தருதண் ணிர்ப்பந்தர் வந்தணைந்தார்.

வந்து அணைந்த வாகீசர், மந்தமாருத் சீதப் பந்தருடன் அமுதமாம் தண்ணிரும் பார்த்தருளிச் சிங்தை வியப்புற்றர் : திருநாவுக்கரசு எனும் பேர் சந்தமுற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கேணி.pdf/6&oldid=676701" இலிருந்து மீள்விக்கப்பட்டது