பக்கம்:இலக்கியக் கேணி.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரிப் பெருமாள் 63

  • பிணியின்மை" என்ற குறளுரையில் கண்டுகேட்டு' என்ற குறளும் : உயர்வகலம் ' என்ற குறளுரையில் - அடியொட்டி ' என்ற அரிய சொல்லும், “ கவறும் கழகமும்” என்ற குறளுரையில் கலித்தொகையில் காணும் நெத்தம் ' என்ற சொல்லும், மணிருேம்’ என்ற குறளுரையில் சேற்று அரண் என்ற அரணும் குறித்துள்ளார். இவை, இவருடைய பரந்த நூலறிவைப் புலப்படுத்தா நிற்கும். =

இவர் காலம்: இவர் காலம் குறித்துத் திரு. பழனி யப்பப் பிள்ளை அவர்கள் எழுதியது பின்வருமாறு:பரிப்பெருமாள் காமத்துப்பால் உரைத் தொடக்கத்தில் " வாற்சானியம் ' என்ற காம தந்திர நூலைக் குறித்துள் ளார். இவ் வட நூற் காலமுதல் சுவையலங்காரங் களின் இலக்கணங்களை யாய்ந்த வடநூற் புலவர் இன்ப ஒழுக்கத்தைச் சம்போக சிருங்காரம் என்றும் விப்ரலம்ப சிருங்காரம் என்றும் இரு பகுதியினதாகவே வகைப் படுத்து இலக்கணமுரைத்துச் செல்லத் தசரூபகம் என்ற வடநூலாசிரியராகிய தனஞ்சய கவி என்பார் தம் நூலின்கண் இரசங்களின் இலக்கணம் உரைக் கும் நான்காம் பிரிவின்கண் சிருங்காரபாகங்களைக் கூறுங் கால், அயோகோ விப்ரயோகஸ்ச சம்போகஸ் சேதிச த்ரிதா' என்று குத்திரித்துள்ளார். இதன் கருத்து: சிருங்காரம் என்பது அயோகம் என்றும் விப்ரயோகம் என்றும் சம்யோகம் என்றும் மூன்று பாகுபாடுறும்' என்பது. இவர் வகுத்துக் காட்டிய இவ்வியல்பினைப் பரிப்பெருமாள் தழுவிக் கூறுகின்ருராதலின், அந்நூற் காலத்திற்குப் பிற்காலத்தவர் பரிப்பெருமாள் எனத் தெளியலாம். இத்தனஞ்சய கவி கி.பி. 974 முதல் 995 வரை ஆண்ட மாளவ காட்டுப் பரமார குலத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கேணி.pdf/64&oldid=676759" இலிருந்து மீள்விக்கப்பட்டது