பக்கம்:இலக்கியக் கேணி.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. வீணை

வீணை அமைப்பு

தோற்கருவி, நரம்புக்கருவி, துளைக்கருவி, கஞ்சக் கருவி எனப் பெறும் நான்கு வகைகளுள், வீணை என் பது நரம்புக் கருவிகளுள் ஒன்ருகும். இது ஏழு தந்தி களே யுடையது. தண்டின் மேற்புறத்தில் நான்கு தந்திகளும், பக்கத்தில் மூன்று தந்திகளும் உண்டு: தண்டின் மேற்புறத்தில் சுரஸ்தானங்களைக் குறிக்க இருபத்து நான்கு மெட்டுக்கள் உள்ளன. மேற்புறத் துத் தந்திகள் வாசிப்பதற்கும் பக்கத்துள்ள தந்திகள் தாளம் போடுவதற்கும் பயன்படும். வீணையில் குடம் ஒன்று உண்டு. வீணையின் குடம் ஒரேமரக்கட்டையி லிருந்து குடைந்தெடுக்கப் பெறும். இதற்குத் தஞ்சை யில் பலாமரத்தையும் மைசூரில் கருங்காலியையும் உப யோகிப்பர். வீணையின் தண்டும் இம்மரங்களாலேயே செய்யப்பெறும். தண்டின் கீழ் சுரைக்காய் ஒன்று அமைக்கப்பெற்றுள்ளது. இதுவும் ஒலியைப் பெருக்கப் பயன்படும். அதற்கு மேல், தண்டில் வளைவாகக் கழுத்து அமைத்து அதன் நுனியில் யாளியின் உருவம் அமைக்கப் பெற்றுள்ளது.

வீணையின் குடத்தின் மேல் பலகையின் மத்தியில் வைக்கப் பட்டிருக்கும் மெட்டினுலேயே இனிமையான நாதத்தைக் கொடுக்கும் சக்தி ஏற்படுகிறது ..... இவ்வாத்தி யத்தில் எளிதாக வாசிக்கக் கூடியது தானமாகும். சங்கீதத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கேணி.pdf/75&oldid=676770" இலிருந்து மீள்விக்கப்பட்டது