பக்கம்:இலக்கியக் கேணி.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 இலக்கியக்கேணி

குடமுழவம் கொக்கரை வீணை குழல் யாழ் என்று சேரமான் பெருமாள் நாயனரும் ஒரு சேரக் கூறுதலி னின்று இவை வெவ்வேறு கருவிகள் தாமோ என்று நினைக்கத் தோன்றுகிறது. இன்னிசை வீணையர் யாழி னர் ஒரு பால் ' என்ற திருவாசகம் இக்கருத்துக்கு ஆதரவு தருவதாக உள்ளது.

சேக்கிழாரும் வீணையும்

7ஆம் நூற்ருண்டினராய திருநாவுக்கரசர் ற்ேறறை யிலிடப்பட்ட பொழுது பாடிய பதிகத்தின் முதற் செய்யுள்:

மாசில் வீணையும் மாலைமதியமும் வீசு தென்றலும் விங்கிள வேனிலும் மூசு வண்டறை பொய்கையும் போன்றதே ஈசன் எந்தை இணையடி நீழலே ' என்பது.

12ஆம் நூற்ருண்டில் இரண்டாம் குலோத்துங்க சோழனுடைய உயர் அலுவலராயமர்ந்து பெரிய புரா ணம் பாடியருளிய உத்தமராகிய சேக்கிழார், 'மாசில் வீணை என்ற தேவாரத்துக்கு விளக்கவுரை தருவது போல ஒரு பாடலை எழுதியுள்ளார். அப் பாடல் பின் வருமாறு:

வெய்ய நீற் றறையதுதான் வீங்கிளவே னிற்பருவம் தைவருதண் தென்றலணே தண்கழுநீர்த் தடம்போன்று மொய்யொளிவெண் ணிலவலர்ந்து முரன்றயாழ் ஒலியினதாய் ஐயர்திரு வடிநீழல் அருளாகிக் குளிர்ந்ததே.

இப்பாடலில் மாசில் வீணை" என்றதை முரன் றயாழொலி ' என்று விளக்கினர் சேக்கிழார் என்றுணர

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கேணி.pdf/87&oldid=676782" இலிருந்து மீள்விக்கப்பட்டது