பக்கம்:இலக்கியக் கேணி.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வினை 87.

லாம். இதல்ை வீணையும்யாழும் ஒன்றே என்ற கருத் துடையவர் சேக்கிழார் சுவாமிகள் என்று கருதலாம். ஆனல் திருநாளைப் போவார் புராணத்தில்,

போர்வைத்தோல் விசிவார்என் றினேயனவும் புகலுமிசை நேர்வைத்த வீணைக்கும் யாழுக்கும் நிலவகையில் சேர்வுற்ற தந்திரியும் தேவர்.பிரான் அர்ச்சஆனகட்(கு) ஆர்வத்தி னுடன்கோரோ சனையுமிவை அளித்துள்ளார்'

என்ற திருப்பாடலில் வீணையும் யாழும் வெவ்வேறு கருவிகள் என்பதைக் காட்டியுள்ளார். இங்ங்னமே சம்பந்தர் புராணத்துள் ' கோதையர்......... ஏதமில் விபஞ்சி வீணை யாழொலி ஒருபால் ' என்றும் கூறியமை

காண்க.

ஒட்டக்கூத்தர்: மூவருலா

1. விக்கிரம சோழனுலா

(102) விரல் கவரும் வீணையும் யாழும் குழலும்; (274) பாடுகெனக் கூனல் யாழ் எடுத்தான் பாணன்;

(279) விசைத்தெழுந்த வீணையிசையாலோ.

2. குலோத்துங்க சோழனுலா

(216) யாழாய் மிடற்ருல் வணக்குதும்; (252) முரல் யாழ் நடைக்கை.

3. ராசராச சோழனுலா

(266) மதுரயாழ் வாங்கி; H (269) விரல்கவரும், வீணைக்ககப்பட வேழம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கேணி.pdf/88&oldid=676783" இலிருந்து மீள்விக்கப்பட்டது