பக்கம்:இலக்கியக் கேணி.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. இலக்கியக்கேணி

அமைக்க வேண்டும் என்று நிலம் அளித்தார். ஆனல் தண்ணிர்ப் பந்தல் அமைக்கப் பெறவில்லை. சாத்த மங்கலத்துச் சபையார் அங்கிலத்தைத் தாம் கைப்பற்றி, ஆண்டார் மருதப் பெருமாள் சந்தானத்து நமச்சிவாய தேவன் என்பாரிடம் ஒப்படைத்து, அவர் திருச்செங் காட்டங்குடியில் க ட் டி ய சிறுத்தொண்டன் திருமடத்தை நடத்துவதற்கு அங்கில வருவாயைப் பயன்படுத்த அவர்க்கு உத்தரவளித்தனர். இங்ங்னம் இப்புனற் பந்தர் தருமம் வேறு முறையில் பயன்படுத்தப் பெற்றது ! ==

கன்னியாகுமரியில் கிடைத்த ஒரு கல்வெட்டு, சோழ அரசனது அமைச்சர், அய்யன் மங்கலக் காமன் என்பார் ஒரு தண்ணீர்ப் பந்தலை நிறுவினர் என்றும், அதனை நடத்துவதற்கு நாடோறும் பத்து நாழி நெல் அளிக்கப் பெற்றது என்றும் கூறுகிறது. இக்கல் வெட்டின் காலம் புலப்படவில்லை.

சாவாவுடம்பெய்துவார்

இதுகாறும் கூறியவற்ருல் இறைவனே தண்ணிர்ப் பந்தரமைத்துப் பாண்டிய அரசுக்கு வெற்றி தந்தமை யும் அப்பூதியடிகள் திருநாவுக்கரசர் பெயரால் அமைத்து வீடுபேறு அடைந்தமையும் நோக்கச் சிறந்த புண்ணியங் களில் புனற்பந்தர் அமைத்தல் ஒன்றென்பது வெளிப் படை. இப்புனற்பந்தர்ப் புண்ணியத்தைப் பலரும் செய்யலாம்; செய்து சாவா உடம்பெய்தலாம் என்கிறது

திரிகடுகம் :

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கேணி.pdf/9&oldid=676704" இலிருந்து மீள்விக்கப்பட்டது