பக்கம்:இலக்கியக் கேணி.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 இலக்கியக்கேணி

ஒரு சொற் பல்பொருள் வகை நூற்பா 975இல், ' மிதுன ராசியும் வீணைக் கருவியும் அசுபதி நாளும் யாழென லாகும் ' என்றுள்ளது.

எனவே வீணையும் யாழும் வெவ்வேறு கருவிகள் என்று சூடாமணி நிகண்டு ஆசிரியர் கொண்டார் என்றும், மற்ற இருவரும் அவ்விரண்டினையும் ఇత ருகவே கொண்டார் என்றும் அறிகிருேம்.

முடிந்தது முடித்தல்

இதுகாறும் கூறியவாற்ருன், மிகப் பழமையான காவியமாகிய சிலப்பதிகாரத்தில் வீணை கூறப்பெற்றுள் ளது என்றும், பெருங்கதை, சீவகசிந்தாமணி ஆசிரியர்கள் வீணையும் யாழும் ஒன்றே என்று கொண்டார்கள் என்றும், கச்சினர்க்கினியர் வீணை என்ற விடத்து யாழ் என்றே உரைவகுத்தார் என்றும், வீணை என்பது தாளத்தோடே கண்டத்திலும் கருவியிலும் பிறக்கும் பாட்டு ' என்று நச்சினர்க்கினியர் கூறியுள்ளார் என்றும், சம்பந்தர், அப்பர். சுந்தரர்,* சேரமான் பெருமாள், மாணிக்க வாசகர் ஆகிய சமயப் பெரியோர்களும், ஒட் டக்கூத்தர், ஜயங்கொண்டார், கம்பர் போன்ற இடைக் காலப் புலவர்களும் வீணையையும் யாழையும் வெவ் வேறு கருவிகளாகவே கருதினர் என்றும், சேக்கிழார் மாசில்விணை என்பதற்கு யாழொலி' என்று உரை வகுத்தாலும், திருநாளைப்போவார் புராணத்தில் இவ்

  • சுந்தரர், கைகிளரும் வீணை வலவன் கண்டாய் '; பண்ணுர்ந்த வீணை பயின்றதுண்டோ' ; வீ8ண தான், அவர் கருவியோ ' என்றும் கூறியமை அறிதற்பாலனவாம்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கேணி.pdf/91&oldid=676786" இலிருந்து மீள்விக்கப்பட்டது