பக்கம்:இலக்கியக் கேணி.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வினை 91.

விரு கருவிகளையும் வெவ்வேருகவே கருதினர் என்றும்

கண்டோம்.

பல்லவ அரசரும் வீணையும்

மகேந்திரவர்மன் (கி. பி. 615-630) என்ற பல்லவ அரசன் இசை வல்லவன்; சங்கீரண சாதி என்ற சிறப்புப் பெயருடையவன். தாளவகை ஐந்தனுள் சங்கீரணம் என்பதைக் கண்டுபிடித்து அதன் வகைகளை அமைத்த வன்’ என்பது அதன் பொருள். மகேந்திரனது குடுமியா மலக்கல்வெட்டு : சித்தம் நமசிவாய' என்று தொடங் குவது; அது இசைபற்றிய கல்வெட்டு, அதன் இறுதியில் ' இவை எட்டிற்கும் ஏழிற்குமுரிய ' என்றுள்ளது. “மகேந்திரன் கண்டறிந்த பண்கள் எட்டு நரம்புகள் கொண்ட வீணைக்கும் ஏழு நரம்புகள் கொண்ட வினைக் கும் உரிய” என்பது இதன் பொருள் என்றும், 'எட்டு நரம்புகளைக் கொண்ட வீணையை இவன் கண்டுபிடித் தவன் ' என்றும் ஆராய்ச்சியாளர் கருதுவர். இவ்வர சன் "பரிவாதினி' என்ற வீணையில் வல்லவன். பரிவா தினி ' என்ற சொல் இவ்வரசனது குடுமியாமலேக் கல் லெழுத்தில் பயின்றுள்ளது. அசுவகோஷர் என்பார் தாம் எழுதிய புத்த சரித்திரத்தில், பரிவாதினி என்பது பொன் நரம்புகளையுடையது என்றும், ஒரு பெண் தன் தோழியை அனைத்துக்கொண்டு படுப்பது போல ஒருத்தி பரிவாதினியை அணைத்துக் கொண்டாள் என் றும் கூறுகிரு.ர்.*

•Dr C: Minakshi; administraton and social Life under the Pallavas – Pages 248-9;

Dr. இராசமாணிக்கர்ை, பல்லவர் வரலாறு, பக்கம் 181,182,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கேணி.pdf/92&oldid=676787" இலிருந்து மீள்விக்கப்பட்டது