பக்கம்:இலக்கியக் கேணி.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93.

விணக்கும் தற்கால வீணைக்கும் பல வேற்றுமைகள் உண்டு. இக்கோயில் சிற்பங்களில் உள்ள வீணைகளுக்கு. ஒரே சுரைக்காய்தான் உண்டு. இச்சுரைக்காயைச் சிவன் தன் இடத் தோள் மேல் சார்த்தித் தண்டத்தின் மேல் அமைந்திருக்கும் தந்திகளை மீட்டுகின்ருர். ஒரு சிற்பத் தில் வீணைக்கு நான்கு நரம்புகளும், மற்ருெரு வீணையில் ஒரே நரம்பும் செதுக்கப்பட்டுள்ளது'

சோழர் அமைத்த வீணைக்காணி?

திண்டிவனத்தில் முதல் இராசராசனது 10ஆவது ஆட்சி யாண்டுக் கல்லெழுத்தில், தரிசாகக் கிடந்த 2910 குழிகிலம் பண்படுத்தப் பெற்றுக் கிடங்கில் திண்டீச்சுவரர் கோயிலில் வீணை வாசிப்பார் ஒருவர்க்கும். உடன் வாய்ப்பாட்டுப் பாடுவார் ஒருவர்க்கும் அளிக்கப் பெற்றது” என்று இருக்கிறது.*

விக்ரம சோழனது 6ஆவது ஆண்டுக் கல்லெழுத்தில்,4 வேப்பத்துார் மகேசுவரர்களும், சிவப்பிராமணர்களும், சபையினரும், திருந்து தேவன்குடியில் அருமருந்துடை யார் கோயிலில் வீணை வாசிக்க ஒரு சிவப்பிராமணனுக்கு வீணைக்காணி அளித்த செய்தி கூறப்பெற்றுள்ளது.

- தஞ்சாவூர் ஜில்லா திருக்கடவூர்த் திருமயானத்துச் கண்ட திருபுவனச் சக்கரவர்த்தி கோனேரின்மைகொண்

தமிழிசை மலர்-5, பக்கம் 27. - வீ8ண வாசிப்பார்க்கு அளிக்கப்பெற்ற இறையிலி நிலம் 141 of 1900; S.I.I. VII, 154.

47 of 1910. H

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கேணி.pdf/94&oldid=676789" இலிருந்து மீள்விக்கப்பட்டது