பக்கம்:இலக்கியக் கேணி.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 இலக்கியக்கேணி

டான் என்பாருடைய 11ஆவது ஆண்டுக்குரிய கல்ல்ெ ழுத்து வீணை வாசிப்பதற்கும் வேதம் ஒதுவதற்கும் நிபந்தம் அளித்ததைக் கூறுகிறது.* +

வீணைக்கொடி

அன்னையர் எழுவர் வணக்கம் கூறுமிடத்துக் கலிங்கத்துப் பரணி ஆசிரியர் பல கொடிகளையும் கூறு வார், வீணைக்கொடியையும் கூறியுள்ளார்:

கேழல் மேழி கலை யாளி வீணை சிலை

கெண்டையென் றினேய பல்கொடி

தாழ மேருவி லுயர்த்த செம்பியர்

தனிப் புலிக்கொடி தழைக்கவே (தாழிசை-18).

இனி, ஒட்டக்கூத்தர் தாம் பாடிய குலோத்துங்கன் பிள்ளைத் தமிழில் 64ஆவது பாடலில், ஊழி பலவந்து பகைமேழியையும் வீணையையும்' என்றவிடத்து, இரண் டாம் குலோத்துங்க சோழனது பகை மன்னரின் கொடி யாக வீணையைக் குறித்துள்ளார். வீணைக்கொடி சிங்கள வர்க்கு உரியது. " பூமருவிய புவியேழும்' என்று தொடங்கும் இரண்டாம் குலோத்துங்க சோழனது இரண்டாவது ஆண்டுக் கல்லெழுத்துத் திருமழபாடி, யிலுள்ளது. அதில் ,வீணைக்கொடிச் சிங்களர் ' என்று உள்ளது. இராவணனும் வீணைக்கொடியோன் ' எனப் பெற்ருன். - - -

  • 54 of 1906. ,
  • 645 of S.I.s. Vol. V; No. 85 of 1895.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கேணி.pdf/95&oldid=676790" இலிருந்து மீள்விக்கப்பட்டது