பக்கம்:இலக்கியக் கேணி.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

cరీ శిణాr 95,

இராவணன் இசைவல்லுநன்; வீணையின் இசை பாட வேதம் பாடுவான்'t' என்பர் கம்பர். ' ஏழிசை யாழ இராவணனே' என்பர் திருஞானசம்பந்தர்; “அரக்க ர்ை...... யாழ் பாடவே” என்பதும் சம்பந்தர் தேவாரம். இராவணன் இசையில் தேர்ந்தவன் ஆதலின் அதற்கு அறிகுறியாகச் சிறந்த இசைக் கருவியான விணையின் வடிவைக் கொடியிற் கொண்டனன் என்று கருதலாம். கம்பர், ஆரணியகாண்டம் சடாயு உயிர்நீத்த படலம், செ. 107இல் சடாயுவுக்கும் இர்ாவணனுக்கும் போர் நடந்ததைக் கூறும்பொழுது சடாயு நீண்ட வீணைக் கொடி பற்றி ஒடித்து உயர்வானவர் ஆசிகொண்டான்' என்றும், செ. 167இல் சீதையைத் தேடிச் செல்லும் இராம இலக்குமணர்கள் வீணைக்கொடி பார்மேல் கிடந்த தைக் கண்டார்கள் என்றும் கூறினர்:- =

மாக மால்வரை கால்பொர மறிந்தது மானப் பாக வீணையின் கொடியொன்று கிடந்தது பார்மேல்.

உயுத்தகாண்டம் இராவணன் வதைப்படலத்துள் .ெ 87இல் இசையுறு கருவியின் இனிதுறு கொடி வான்றும், முதற் போர்ப் படலம் செ. 101இல், ஏழி சைக் கருவி...... தொல்கொடி' என்றும் கூறியுள்ளார்.

இராவணனது துவசம் மனிதன் தலைவடிவமெழுதப் பட்டது என்பர் ரீ வால்மீகி முனிவர். ஆனால் இரா வணனது கொடி, வீணைக்கொடி என்று கம்பர் கூறியது

=

3 ஆரணியகாண்டம் சடாயு உயிர்நீத்த படலம் செ. 21

t ങു. ബക്ട செ. 107ன் உரை (வை. மு. ச. சே. கி.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கேணி.pdf/96&oldid=676791" இலிருந்து மீள்விக்கப்பட்டது