பக்கம்:இலக்கியக் கேணி.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. உடன்கட்டை ஏறல்

' எஞ்ஞான்றும் காதல் இருவர் கருத்தொருமித்து ஆதரவு பட்டதே இன்பம்” என்பது ஒளவையார் பாட்டு. காதலனும் காதலியும் இணைபிரியாது அன்பும் அருளும் தாங்கிச் சுற்றம் ஓம்பி. விருந்து புறந்தந்து அருந்தவர்ப்பேணி, இல்லறம் நடாத்துவதே இல் வாழ்க்கை. இல்லற மல்லது நல்லறமன்று ' என்பர் ஒளவையார். 'அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை” என்ருர் வள்ளுவனரும். ஆணும் பெண்ணும் இயைந்து வாழ்வதையே சராசரங்களில் எங்கும் காண்கிருேம். தன் மடப்பிடியோடு களிறு வருவன கண்டேன், வரிக்குயில் பேடையொடாடி வைகி வருவன கண் _ெ, ' பேடைமயிலொடுங் கூடிப் பிணைந்து வருவன கண்டேன்' என்று ஆண் பெண் இணைந்து வாழும் வா|க்கையையே திருவையாற்றில் திருங்ாவுக்கரசர் கண்டார்.

|| || இம்மைப் பிறப்பிற் பிரியலம் என்ருேளுக்

கண்ணிறை நீர்கொண் டனள் '

என்பது திருவள்ளுவர் காட்டும் இல்லறக் காட்சிக

குறள் ஒன்று.

இம்மை மாறி மறுமை யாயினும் நியா கியர்என் கணவனே யா ைகியர்நின் நெஞ்சுநேர் பவளே '

என்பது குறுந்தொகையிற் கண்ட தலைவி யொருத்தியின்

7.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கேணி.pdf/98&oldid=676793" இலிருந்து மீள்விக்கப்பட்டது