பக்கம்:இலக்கியங்கண்ட காவலர்.pdf/27

விக்கிமூலம் இல் இருந்து
தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
இலக்கியங் கண்ட காவலர் 25
 


சுருங்கக் கூறின் அக்கால மன்னர்கள் அறிய வேண்டுவன வெல்லாம் அறிந்திருந்தனர்.

அறிவு நலத்திற் சிறந்த தமிழ் மன்னர்கள் புலமை நலமும் சிறப்பாகப் பெற்றுப் பாவல்ல காவலராயும் திகழ்ந்தனர். அவர்கள் பல தமிழ்ப் பாக்களைப் பாடி யுள்ளனர். அப் பாக்கள் சங்க காலத் தமிழ் நூல்களில் இடம் பெற்று இறவாப் புகழுடையனவாக விளங்கு கின்றன. அம் மன்னர்களிற் சிலருடைய வரலாறு களையும், அவர்தம் பாக்களில் கூறிய விழுமிய கருத்துக்களையும் இந்நூலில் அறிந்து கொள்வோமாக.