பக்கம்:இலக்கியங்கண்ட காவலர்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
4
இளந்திரையன்

சான்றோர் உடைத்து’ என்ற சிறப்பினை உடையது தொண்டை நாடு. தொண்டை நாடு என்ற பெயரால் அந்நாடு அழைக்கப் பெறுதற்கு முன்னர், அஃது, அருவா நாடு, அருவாவடதலை நாடு என இரு கூறுபட்டுக் கிடந்தது. அந்நாட்டில் அன்று வாழ்ந்த மக்களும் அருவாளர் என்றே அழைக்கப் பெற்றனர். அருவா நாட்டின் தலைநகராய் அமைத்து. சிறப்புற்றது காஞ்சிமா நகரம். அந்நாட்டின் வடக்கே வடவெல்லை யாய் அமைந்து வளம் பல தந்தது வேங்கடமலை.

அருவா நாட்டிற்குத் தொண்டை நாடு எனப் பெயரளித்துப் பாராண்ட அரசர் தொண்டையராவர். சேரர், சோழர், பாண்டியர் என்ற அரச இனத்தாரைப் போன்றே, தொண்டையர் என்பாரும் ஊராண்ட ஒர் அரச இனத்தவராவர். அந்த அரச இனத்தில் வந்து தொண்டை நாடாண்ட அரசர்களுள் மிகமிகத் தொன்மை வாய்ந்தவன் திரையன்.

சோழ நாட்டின் தலைநகராய், கடல் வாணிகம் மிக்க கடற்கரைப் பட்டினமாய்ச் சிறப்புற்ற புகார்