பக்கம்:இலக்கியங்கண்ட காவலர்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
11
பசும்பூண் பாண்டியன்

மிழகத்தைக் கடைச் சங்க காலத்தில் அரசாண்டிருந்த பாண்டிய மன்னர்களில், பசும்பூண் பாண்டியன் தலைசிறந்தவனாவான். சேரவேந்தர்களுள் செங்குட்டுவனும், சோழ வேந்தர்களுள் திருமாவளவனும் சிறந்து விளங்கியதைப் போலப், பாண்டிய வேந்தர்களுள் பாருளோர் போற்ற வாழ்ந்தவன் பசும்பூண் பாண்டியன். இவன் நெடுஞ்செழியன் எனவும் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் எனவும் அழைக்கப் பெறுவான்.

பசும்பூண் பாண்டியன், நனிமிக இளையனாய் இருக்கும் காலத்திலேயே நாட்டாட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டான்; அவன் இளமைத் தோற்றம் எழில் பெறக் காட்சி அளிப்பதில் குன்றவில்லை. தாய் தந்தையர், குழவிப் பருவத்தில் அணிவித்த கிண்கிணியினை நீக்கி விட்டு, வீரக்கழல் புனைவதையும் அப்பொழுதுதான் மேற்கொண்டான்; பிறந்த மயிர்களையும் பெருவிழாவும் அண்மையிலேயே கொண்டாடினான்; வளை களைந்து வில்லேந்தும்