பக்கம்:இலக்கியங்கண்ட காவலர்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியங் கண்ட காவலர் 97



இதுபோன்ற நிகழ்ச்சி, இதுவரை நிகழ்ந்ததாக யாம் கண்டதும் இலம்; கேட்டதும் இலம்!” என்று புலவர் இடைக்குன்றுார்க் கிழார் பாடிப் பாராட்டினார்.

தன் நாட்டுள் புகுந்து போரிட வந்த பகைவரைப் பாழ்செய்து வென்ற பசும்பூண் பாண்டியன், அதன் பின்னர்ப் பகைவர் நாடுகளுள் தான் புகுந்து போரிடத் தொடங்கினான். தமிழகம் எங்கும் சென்று, தமிழ் நாட்டின் அரசியல் அமைதியைக் குலைத்து வாழ்ந்து வந்த கொங்கர் எனும் போர்வீரர் கூட்டத்தைக் கொங்கு நாடு சென்று கொன்று திரும்பினான்; சேர நாடு சென்று, வெளிநாட்டு வாணிகச் செல்வத்தால் வளம் சிறந்து விளங்கிய முசிறித் துறையை முற்றி, அதைத் காத்திருந்த சேரனது யானைப் படையை அழித்து மீண்டான்; தன் தலைநகருக்கு அண்மையில் அர்சாண்டிருந்த, நீடூர்க்குரிய எவ்வி எனும் குறுநிலத் தலைவனை வென்று, அவனுக்குரிய முத்துர்க் கூற்றத்தையும், மிழலைக் கூற்றத்தையும் வென்று தனதாக்கிக் கொண்டான்.

வெற்றிமேல் வெற்றி பெற்று விழுப்புகழ் நிறைந்த வேந்தனாய் வாழ்ந்த பசும்பூண் பாண்டியன், தன் பாண்டிப் படையின்பால் பேரன்புடையனாவன். பாண்டியன் பாசறை வாழ்வின் ஒருநாள் நிகழ்ச்சி, அவன் தன் படை வீரர் பால் காட்டும் பரிவு எத்துணைப் பெரிது என்பதை எடுத்துக் காட்ட வல்லது. பகைவர் படையின் முன்னணியில், அப்படையின் பேரரணாய் நின்று காத்த யானைப்