பக்கம்:இலக்கியச்சுவை.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10


எதிர்பாராத வண்ணம் உயிர் துறந்த நெடுஞ்செழியனைக் கண்டு எவ்வாறு அடக்கம் செய்வதென்று புரியாதவர்களாய் அங்கு கூடியிருந்த சான்றோர்கள், பேரெயில் முறுவலார் என்ற நல்லிசைச் சான்றோரை, நோக்கி அறிவுரை வழங்குமாறு வேண்டினார்கள். முறுவலார் கூறினார்: "நெடுஞ்செழியன் காதல் அரம்பையர் போல் இளம் கன்னியரோடு இன்பம் துய்த்தான், பல்வேறு நறுமண மலர்களைச் சூடினான். குளிர்ந்த மணங்கமழும் சாந்து பூசினான், பகைஞரை வேரோடும் வேரடி மண்ணோடும் கெடுத்தான். நண்பர்களை உச்சிமேல் வைத்து மச்சினான். வலியார் என்பதற்காக எவர்க்கும் வால் டித்தானில்லை. மெலியார் என்பதற்காக எவரையும் இழித்துப் பழித்தானில்லை. ஈ எனச் சொல்லி யாரிடமும் இரந்து அறியான். இல்லையெனச் சொல்லி தன்னிடம் இரந்தோர்க்கு மறுத்தும் அறியான். அரச அவையில் உயர் யுகழ் ஓச்சி நின்றான். தாக்க வரும் படைகளைத் தன் எல்லையுள் புகாமல் எதிர் நின்று தடுத்தான். தப்பினோம் பிழைத்தோமென்று ஓடும் படைகளைத் துரத்தியடிக்க நினையான். நால்வகைப் படைகளைத் திறம்பட நடத்தினான். இனிய பொருள்கள் பலவும் பலர்க்கும் வரையாது வழங்கினான். பாணர் போன்ற கலைத் தொண்டர்களுக்குப் பசி தீர்த்துப் பாதுகாப்பு ஈந்தான். பேச்சில் ஐயக்க தயக்கமின்றி நடுவு நிலைமையில் உறுதி கொண்டு நின்றான். இவ்வாறு செய்யத் தகுந்தவற்றையெல்லாம் செய்தான். ஆகவே, இத்தகைய புகழ்க் காதலனாகிய நெடுஞ்செழியன் சடலத்தை எவ்வாறு அடக்கம் செய்யினும் செய்க. அதனால் அவன் புகழுக்கு ஊறு ஒன்றும் நேராது.

இனி பாடல்:

"தொடியுடைய தோள் மணந்தனன்
கடிகாவில் பூச்சூடினன்
தண்கமழும் சாந்து நீவினன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்சுவை.pdf/14&oldid=1477239" இலிருந்து மீள்விக்கப்பட்டது