பக்கம்:இலக்கியச்சுவை.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12


சரக்கைக் கண்காட்சி வைக்கிறான். நகரப் படலத்தில் கோசல நாட்டின் நடுநாயகமான அயோத்தி நகரைப் படம் பிடித்துக் காட்டுகிறான். கல்வியில் பெரியவனான கம்பன் பல்கலைப் பரிதியான கம்பன், கவிதா மாமேதையான கம்பன் வாழ்வின் நடமாடும் அனுபவப் பெருங்களஞ்சியமாக ஒளிவீசிய கம்பன் அயோத்தி நகரில் பற்பல வளங்களை அற்புதமாக பலப்பல பாடல்களில் சித்தரித்துக் காட்டுகிறான். அவன் தீட்டிக் காட்டிய புதிய கனவுலகச் சித்திரத்தில், இறுதியாக அவன் காட்டும். கைவண்ணம் என்ன தெரியுமா?

கல்வி என்னும் ஒரு வித்து அங்கு முளைத்தெழுகிறது. இந்த 'கேடில் விழுட் செல்வத்தி'லிருந்து எண்ணிறந்த கேள்விச் செல்வங்கள் என்னும் அழகிய சிறந்த வலிய கிளைகள் கிளைக்கின்றன. இவற்றின் வளர்ச்சியில் அருந்தவம் (கடுமையான முயற்சி) என்ற இலைகள் தழைக்கின்றன. அன்பாகிய அரும்புகள் அரும்புகின்றன. அறமாகிய மலர்கள் மலர்கின்றன. இன்ப வாழ்வு ஆகிய பழங்கள் பழுத்துக் குலுங்குகின்றன.

இதோ பாடல்:

"ஏகம் முதற் கல்வி முளைத்தெழுந்து எண்ணில் கேள்வி
யாகும் முதல் திண்பனை போக்கி அருந்தவத்தின்
சாகம் தழைத்து அன்பு அரும்பித் தருமம் மலர்ந்து
போகம் கனியொன்று பழுத்தது போலுமன்றே"

[பால - நகரப் படலம்]

இந்த நிகரற்ற பாடல் என் நினைவைத் தாக்கிற்று. கல்வியும் கேள்வியும் கடுமுயற்சியும் மட்டும் போதா இன்ப வாழ்வை சமுதாய அளவில் முழு நிறைவாகத் துய்க்க கல்விச் செல்வமும் கேள்விச் செல்வமும் இணைந்து கடு முயற்சியைத் தழுவி அன்பைக் குழைத்து அறத்தின் கட்டுத்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்சுவை.pdf/16&oldid=1477243" இலிருந்து மீள்விக்கப்பட்டது