பக்கம்:இலக்கியச் சாறு.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

வ.சுப. மாணிக்கனார்



கோவைத் தலைவன் பாட்டுடைத் தலைவனாகிய சிவனைத்தொழுது பாராட்டும் அடியவன் ஆகின்றான்; அவ்வாறே பாங்கனும் தில்லைக்கூத்தனை நெஞ்சத்தில் வைத்த அடியான் ஆகின்றான். தலைவியது உடன்போக்கில் வருந்தித் தேடியலையும் செவிலி சுரத்திடை எதிர்வருவாரை நோக்கித் தன்மகள் ஒருவனோடு சென்றது பற்றி வினவுகின்றாள். ஒருகாலில் கழல் இருந்தது: ஒருகாலில் சிலம்பு இருந்தது; ஒரு பக்கம் வெண்பட்டாடை, ஒரு பக்கம் செம்பட்டாடை இவ்வாறு இணைபிரியா உருவத்தைப் பார்த்தோம்: பார்த்து உமையொரு பாகன் என்றே அந்த எழிற்காட்சியைத் தொழுதோம்: தொழும் நற்பேறு பெற்றோம் என்று எதிர்வருவார் மறுமொழிகின்றனர்.

மின்தொத் திடுகழல் நூபுரம் வெள்ளைசெம் பட்டுமின்ன

ஒன்றொத் திடவுடை யாளொடொன் றாம்புலி யூரனென்றே

நன்றொத் தெழிலைத் தொழவுற்றன மென்னதோர் நன்மைதான்

குன்றத் திடைக்கண் டனமன்னை நீசொன்ன கொள்கையரே (246)

இங்கு கிளவித் தலைவனும் தலைவியும் பாட்டுடைத்

தலைவன் தலைவியாகவே பார்க்கப் பெறுவது அகவிக்கணத்தில் ஒரு பெரிய புரட்சியாகும். கோவையின் புதுமை

இளங்கோ காப்பிய மரபில் புரட்சி செய்தவர் என்பதுபோல மணிவாசகரும் அகத்தினை மரபில் அடிப்படைப் புரட்சி செய்தவர்.இளங்கோ புரட்சி செய்தவர் என்று கூறினாலும்,செய்த புரட்சிக்ள் என்ன? என்று உராய்ந்து பார்ப்பதற்கு அவருக்கு முந்திய காப்பியங்கள் நமக்குக் கிடைக்கவில்லை. தொல்காப்பியமும் சங்க இலக்கியமும் நாம் பெற்றிருப்பதால் திருக்கோவையில் மணிவாசகர் செய்த மாறுபாடுகளை ஒத்திட்டுத் தெளிகின்றோம். அகத்துறைகள் பல என்பதும், அவற்றைத் தனித்தனி நிகழ்ச்சியாகவே கருத வேண்டும் என்பதும், காதல் நிகழ்ச்சிகளை வரிசையாக கோவைப்படுத்தக்கூடாது என்பதும் தொல்காப்பியமும் சங்க இலக்கியமும் காட்டும் அகமரபு. கபிலர் அகப்பாடல் பல