பக்கம்:இலக்கியச் சாறு.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. கோவைத் திறன்

'யாவையும் பாடிக் கோவை பாடுக என்பது பழமொழி. இம்மொழிக்கிணங்க, கலித்தொகை அகநானூறு ஐங்குறுநூறு பத்துப்பாட்டு புறநானூறு முதலான சங்க நூற் சொற்பொழிவுகளும், பதினெண்கீழ்க்கணக்குச் சொற்பொழிவுகளும் உலா கலம்பகம் தூது பற்றிய சிறுநூற் சொற்பொழிவுகளும் நிகழ்ந்த பின்னர், இந்தக் கோவைச் சொற்பொழிவு இன்று நடக்கின்றது.

திசையெல்லாம்செந்தமிழைப்பரப்பிவரும் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் ஆற்றும் நிலைத்த பணிகள் பல; கடைப்பிடிக்கும் புதுத்துறைகள் பல. அவற்றுள் ஒன்று இச் சொற்பொழிவு இயக்கமாகும். இதுகாறும் பத்துக்கு மேற்பட்ட இலக்கிய மாநாடுகள் கூடியுள்ளன. ஐம்பதிற்கும் மேற்பட்ட புலவர் பெருமக்கள் கலந்து சொற்பொழிந்துள்ளனர். இவ்வகைப் பணிபுரியும் கழகத்தின் திறம் முதற்கண் போற்றற் குரியது. இதனினும் போற்றத் தகும் கழகத்தின் திறம் ஒன்று உண்டு. புலவர்களின் சொற்பொழிவுகளை உடனடியாகக் கேட்டு விட்டுவிடும் இறந்த காலப் பொருளாக்காமல் நிகழரும் எதிரரும் பயன்கொள்ள அச்சுயிர் ஏற்றி நூற்பிறவியாக்கி வாழ்விக்கின்றனர் கழகத்தார். அதனால் தமிழ் வளர்கின்றது. யாதொரு நிலையம் தமிழை வளர்க்குமோ, வாழ்த்துமோ, அந்நிலையம் வளர்க வாழ்க என்று பாராட்டுவது நம் தமிழ்ப் பிறப்பின் பண்பாகும். இப்பொழிவுகளைத் தமிழுக்குத் தொடக்கத் திறனாய்வுகள் என்று கூறலாம். இவற்றால் தமிழிலக்கியங்கள் பரவும் எனவும், திறன்கலை வளரும் எனவும் எதிர்பார்க்கலாம். -

சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம் -சிற்றிலக்கிய மாநாடு - தலைமையுரை - 1961. -