பக்கம்:இலக்கியச் சாறு.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியச் சாறு

103



சொற்பொழிவு என்பது ஆகுபெயராய் இன்று ஒரு நூல் வகையைச் சுட்டும் வழக்குப் பெற்றுவிட்டது. கோவைச் சொற்பொழிவைக் கேட்டேன் என்ற நடையோடு கோவைச் சொற்பொழிவைப் படித்தேன் என்ற புதிய நடையும் இந்நாள் தோன்றாலாயிற்று. கலம்பகம் உலா தூது முதலான செய்யுள் வகைபோல,சொற்பொழிவு என்பது உரைநடைவகையில் ஒரு கூறாகத் தோன்றியது கண்டும், அதனைச் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார் வளர்ப்பது கண்டும், அவ்வளர்ச்சியின் பங்காளிகளாக நீங்கள் இவண் வந்து கூடியிருப்பது கண்டும் பெருமித உவகை கொள்கின்றேன்.இவ் வளர்பணிக்கு என்னை ஒரு பணியாளன் ஆக்கிய கழகத்தார்க்கு நன்றியன். மனை நூல்நிலையங்கள்

இருவர் மூவர் விரல்விட்டு எண்ணத்தக்க சில கோவை நூல்களே இஞ்ஞான்று நமக்குக் கிடைத்துள. கோவை பாடும் வழக்கம் ஆயிரத்து நானுாறு ஆண்டுகட்கு முன்னரே தொடங்கிவிட்டது. இப்பன்னூறாண்டுக் காலத்து எழுந்த கோவைகள் எண்ணிறந்தன என்று சான்றுபட அறிகின்றோம். அவைகள் இறந்தன எனவும் உடன் அறிகின்றபோது, பிள்ளைப்பேறு கேட்க வந்தோர் சாவு கேட்ட உணர்ச்சி தோன்றுகின்றது. அகப்பொருள் இலக்கண நூல்கள் இடைக்காலத்துப் பல தோன்றியிருத்தலின், கோவைகளின் எண்ணிக்கையும் குறைவின்றியிருத்தல் வேண்டும். கிளவித் தெளிவு, கிளவி மாலை, கிளவி விளக்கம்,சிற்றெட்டகம், தமிழ் முத்தரையர் கோவை, தமிழ்க் கோவை, (இரண்டாம்) குலோத்துங்கன் கோவை, அசதிக் கோவை, பல்சந்த மாலை, பொருளியல், வச்சத் தொள்ளாயிரம், காங்கேயன் நாலாயிரக்கோவை, விஞ்சைக் கோவை,வங்கர்கோவை,நந்திக் கோவை, குமாரசேனாகிரியர் கோவை, தானக்கோவை, காரிக் கோவை, இராமீசுவரக் கோவை, அரையர் கோவை, அண்ணாமலைக் கோவை, அகத்திணை என்றின்ன கோவை நூல்கள் இருந்தன என்று பிறநூற் குறிப்புக்களால் அறிகின்றோம். பிள்ளை இறப்பினும் அதன் பெயரேனும் ஒருவாறு ஆறுதல் தருமன்றோ? இனிப்புக் கட்டியினின்றும்