பக்கம்:இலக்கியச் சாறு.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

வ.சுப. மாணிக்கனார்



உதிர்ந்த சீனித்துள்கள் போல, மறைந்த நூல்களின் சில பாடல்கள் கிடைக்கப் பெற்றுள்ளோம். *

இத்தமிழ்ச் செல்வங்கள் ஏன் அழிந்தொழிந்தன? *வாரணம் கொண்டது அந்தோ வழி வழிப் பெயரும் மாள' என்று பலர் காரணம் கூறுவர். நீரும் நெருப்பும் தமிழின் சுவையை நுகர விரும்பின என்று சிலர் நயனுறப் பேசுவர். வாழ்வுப் போரிடைப் புகுந்து வெல்ல மாட்டாத் தகுதியில் நூல்கள் அழிவதியற்கை என்று இற்றைத்திறனிகள் விளக்குவர். இவையெல்லாம் நம் மொழி நூற்செல்வங்கள் காலந்தோறும் அழிவுண்டமைக்குக் காரணங்கள் ஆகா. தமிழர் தம் மொழித் தாயை என்றும் எப்படியும் பேண முனையாப் பெரும் பேதைமையே தமிழ் நூல்களின் மறைவுக்கு அறிவுடைக் காரணமாகும்.இதனைநாம் உணரவும் உணர்த்தவும் வேண்டும். இன்றுள்ள கோவைகளேனும் பிழைக்க வழியுண்டு கொல் என்று நினைக்க அஞ்சுகின்றேன். முன்னோர் தமிழகத்தில் பெறுமவற்றுள் இவைபோல் யாம் அறிவதில்லை என்று பெற்ற நூற் குழந்தைகளை உவந்து புறந்தாராது, இவை என்ன பேறு என்று பின்னோர்கள் பேதைப்படுவரேல், அக்குழந்தைகள் தாமே கதறி அழுது கண்ணிர் வடித்துத் துடித்து மடியும். இக்குழவிக் கொலை அரசியற் கொடுங்கோன்மையினும் ஆழ்ந்தகன்ற இனக் கொடுங்கோன்மையாகும். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாகப் பெருகித் தடித்து வரும் மொழி பேணாப் பேதைமையை, அழிவுக்கூர்ங்கருவிகள் பெருகியுள்ள இக்காலத்துக்கட்டாயம் அழித்தாக வேண்டும்; வளரப் பார்த்தல் கூடாது.

வழி என்ன? கருவி என்ன? பல்கலைக் கழகங்களிலும், கல்லூரிகளிலும், உயர்நிலைப்பள்ளி, தொடக்கப் பள்ளிகளிலும் இருக்கும் நூல்நிலையங்கள் போதா. பொது நூல்நிலையங்கள் பட்டிகள்தோறும் பெருகினும், அவை நல்ல நூல்களை வாங்கிக் காவா ஆதலின் தமிழன் என்பான் ஒவ்வொருவன் இல்லத்திலும் அடுக்களை போல ஒரு தமிழ் நூல்நிலையம் வேண்டும். திருமணச் சடங்குகளுள் தமிழ் நூல்நிலையம் அமைப்பதும் ஒன்றாதல் வேண்டும். தமிழ்நூல்