பக்கம்:இலக்கியச் சாறு.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106

வ.சுப. மாணிக்கனார்



செல்வத்துள் செந்தமிழாம் செல்வம் சிறந்தது. தமிழின் மேன்மை கருதியன்றோ ஆரூர்த்தியாகர் சுந்தரர்க்குத்துதாகப் பரவையாரிடம் நடந்து சென்றார். ஆதலின் தமிழ்க் கல்வியின் பொருட்டு நம் தலைவர் பிரிந்தது ஏற்கத்தகும் (483) என ஆரூர்க்கோவைத் தோழி தலைவிக்குத் தமிழின் தெய்வத் தன்மையைப் புலப்படுத்துகின்றாள். 'யாரே கல்லாமல் உயர்ந்தார், தென் கூடல் இறையவனும் சீரேய் சங்கத்தில் இனிதிருந்து ஆய்ந்தனன் (424) என்ற வியாசக் கோவையில் மீனாட்சி சுந்தரம் பிள்ளை சங்கத் தமிழ்க் கல்வியைப் போற்றுவர். ‘செந்தமிழ்க் கலையைக் கற்கச் சென்ற காதலர் அருள் வேண்டும் என்னும் ஒர் அறவுரை கற்க மாட்டாரா? ..(4.10) என்று திருவெங்கைக் கோவை தமிழுக்கும் அருளுக்கும்

உள்ள தொடர்பை இயம்புகின்றது.

இயற்கைப் புணர்ச்சிக்குப்பின் தலைவன் பாங்கனைக் காண்கின்றான். நின் மெலிவிற்குக் காரணம் இதுவோ - இதுவோ? என்று பாங்கன் வினைவுகின்றான். பாங்கன் கருதியுரைக்கும் காரணங்கள் பல கோவைகளில் தமிழ்க் காரணங்களாக உள.

வண்டுறை வார்பொழில் சூழ்நறை யாற்றுமன் ஒடவைவேல் கொண்டுறை நீக்கிய தென்னவன் கூடற் கொழுந்தமிழின் ஒண்டுறை மேலுள்ள மோடிய தோவன்றி யுற்றதுண்டோ தண்டுறை வாசிந்தை வாயென் னாங்கொல் தளர்கின்றதே.

(பாண்டிக்கோவை - 25) சிறைவான் புனற்றில்லைச் சிற்றம் பலத்துமென் சிந்தையுள்ளும் உறைவான் உயர்மதிற் கூடலின் ஆய்ந்தவொண் தீந்தமிழின் துறைவாய் நுழைந்தனை யோவன்றி யேழிசைச் சூழல்புக்கோ இறைவா தடவரைத் தோட்கென்கொ லாம்புகுந் தெய்தியதே.

- (திருக்கோவை - 20) தென்செய்த பண்ணின் திறந்தெரிந் தோதெய்வப் பாவலர்தம் முன்செய்த நூலின் முறைதெரிந் தோசெம் முகங்கருகிப் பொன்செய்த மேனியும் புல்லென்று வாடிப் புலம்பவென்னோ என்செய்த தோவறி யேன்திரு மேனி இறைவனுக்கே.

. (அம்பிகாபதி - 25)