பக்கம்:இலக்கியச் சாறு.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியச் சாறு

107



போதைப் பொதிந்திட் டிருள்துங் களகப் பொருப்பிமய மாதைக் கலந்த திருவெங்கை வாணர் மதுரைச்சங்க மேதைப் பகந்தமிழ்ப் பாற்கடல் நீந்திய வீரமொரு பேதைக் குடைந்துநின் றாய்தகு மோசொல் பெருந்தகையே.

- (திருவெங்கைக் கோவை - 45) கொத்துறு முத்தமிழ் வேலையின் வாய்த்தனையோ.

(கலைசைக் கோவை - 45)

மாவேட்டம் செய்தனை யோமன்னர் போர்செய் துவந்தனையோ நாவேட்ட முத்தமிழ் ஆய்ந்தனையோ.

(வியாசக் கோவை - 142) தலைவனை இவ்வகையால் வினாவுதல் மூலம் தமிழ் சுற்றமெலிவும் தமிழிசை கேட்ட மெலிவும் பாராட்டற்குரியன என்பதுகோவைப்புலவர்களின் குறிப்புரையாகும்.இங்ஙனமே இடைக்காலத்தில் தோன்றிய சிறு பெரு நூல்களில் எல்லாம் தமிழின் மாட்சி பறைசாற்றப்படுகின்றது. ஆதலின் புலவர்கள் போலவே மக்களும் தமிழ்ப் பற்றுடையவர்களாக இருந்தனர் என்று கொள்ளலாம். இப்பற்றின் விளைவு என்ன? இவ்விளைவால் தமிழுக்கு வந்த ஆக்கம் என்ன? என்று காண்போம். -

இடைக் காலத் தமிழ் வளர்ச்சி

தொல்காப்பியத்தையும் சங்கத் தொன்னூல்களையும் படிக்கவும் பரப்பவும் வேண்டும் என்ற வேணவா இடைக்காலத்துத் தீக்கொழுந்து போலப் பற்றியது. தொன்னூல்களை நேரடியாகக் கற்க முயன்றனர்; அம்முயற்சியினால் உரைகள் பெருகின. தொல்காப்பியத்திற்குப் பலர் உரையெழுதினர். சங்கவிலக்கியங்களுக்குக் குறிப்புரைகளும் பேருரைகளும் கிளைத்தன; இதனால் பழந்தமிழ் இலக்கியப் பயிற்சி இடைக்கால மக்களிடை எளிதாக்கப்பட்டது. தொல்காப்பியத்திற்கும் சங்கப் பனுவல்கட்கும் உரையாசிரியர்கள் பெரும்பாலும் பிற்கால நூல்களிலிருந்து மேற்கோள்கள் தருவதில்லை. பழந்தமிழ் நூல்களை அவற்றிற்குரியூ பெருமையோடு பரப்ப