பக்கம்:இலக்கியச் சாறு.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108

வ.சுப. மாணிக்கனார்



விரும்பினார்கள் உரையாசிரியர்கள் என்ற நெறியை இதனால், அறிகின்றோம். இறையனாரகப் பொருள், நம்பியகப் பொருள், வெண்பாமாலை, நன்னூல், யாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரியை, தண்டியலங்காரம் முதலான எத்துணையோ இலக்கண நூல்கள் இடைக்காலத்து வெவ்வேறு யாப்பு வடிவில் தோன்றின. முன்னூல்களை நன்கு கற்பதற்கு இடைத்தமிழோர் மேற்கொண்ட மற்றொரு முயற்சி இதுவாகும். காலத்திற்கேற்பச் சிறுசிறு இலக்கண நூல்கள் ஒவ்வொரு கூறுபற்றி எழுந்தனவாம்.இவ்விலக்கண நூல்களின் பாயிரங்களைப் படித்துப் பாருங்கள். முயற்சியின் நோக்கமும் தொல்காப்பியத்தைக் கற்பதற்குப்பின்வந்த இலக்கண நூல்கள் வாயில்களே என்ற கருத்தும் விளங்கிக் கிடக்கும்.

தொல்காப் பியனருள் ஒல்காப் பெரும்பொருள் அகப்பொருள் இலக்கணம் அகப்படத் தழிஇ இகப்பருஞ் சான்றோர் இலக்கியம் நோக்கித் தொகுத்து முறைநிறீஇச் சூத்திரம் வகுத்தாங்கு அகப்பொருள் விளக்கமென் றதற்கொரு நாமம் புலப்படுத் திருளறப் பொருள்விரித் தெழுதினன் என்பது நம்பியகப்பொருளின் பாயிரம். அகப்பொருள் விளக்கம் என நூற்குப் பெயரிட்டிருப்பதும் கற்பவர் தம் இருளறப் பொருள் விரித்து எழுதினன் என்ற கூறியிருப்பதும் நினையத்தகும். -

உரைவகை ஒரு முயற்சி; சார்பிலக்கண நூல்வகை ஒரு முயற்சி; சிற்றிலக்கண வகை ஒரு முயற்சி. இம்மூவகை முயற்சியாலும் தொன்னூல்கள் இடைக் காலத்துப் பரவின, படிக்கப்பெற்றன. சிற்றிலக்கிய முயற்சியே பல்வகைப் பிரபந்தங்களின் எழுச்சி யாயிற்று. கோவை என்பது இவ்வகையில் ஒன்று. தொல்காப்பியத்தும் சங்கத் தொகை யிலும் மிகுந்து கிடக்கும் பொருள் அகப்பொருளாதலின், அதனைப் பரப்பத் தோன்றிய கோவை யிலக்கியம் சிற்றிலக்கியங்களுள் ஒரு பேரிலக்கியமாயிற்று; பேரின்பத்திற்குத் துடித்த மாணிக்கவாசகர் பாடும் பெற்றியுடையதாயிற்று. வீடும் துறவும் வேண்டி வாழ்ந்த