பக்கம்:இலக்கியச் சாறு.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியச் சாறு

109



இடைக்காலத் தமிழ் மன்பதையார் சிற்றின்பங் கூறும் கோவையைப் பேரின்பக் குறிக்கோளுக்கும் பயன்படுத்தினர். 'இவள் தந்த இன்பத்தைச் சிற்றின்பம் என்பது எம்பெருமான் நடஞ்செய்யும் அம்பலத்தைச் சிற்றம்பலம் என்பது போலும்’ என்று சிவப்பிரகாசர் காதல் இன்பத்தைப் பெருமைப் படுத்துவார். துறவிகளும் கோவை பாடியுள்ளார்கள். ஆதலின் சிற்றின்பத்தை வெறுத்தாலும் அவ்வின்ப இலக்கியங்களை வெறுக்காது வளர்த்தனர் என்று அறிகின்றோம். பற்றற்ற கோவை வளர்ச்சியினாற்றான் தொல்காப்பியமும் சங்க நூல்களும் இடைக்காலத்துக் காக்கப்பட்டன; இடைத் தமிழோர் முயற்சியால் இப்பெருந்தமிழ்ச் செல்வங்களை இன்று நாம் எய்தப் பெற்றுள்ளோம். - சங்கநூற்கருத்துக்கள்

தொல்காப்பியக் கருத்தும் சங்கநூற் செய்திகளும் கோவைகளில் மறுபிறவியெய்தி விளங்குகின்றன.அகத்திணை மாந்தர்களுக்குப் பெயரிடுதல் கூடாது என்பது தொல்காப்பிய இலக்கணமாகும். இவ்வுயிரான நெறியை எல்லாக் கோவைகளும் புறநடையின்றிப் போற்றியுள்ளன. யார் பாட்டுடைத் தலைவனாகலாம் என்று தமிழ் முதல்நூல் வரம்பு செய்யவில்லை. ஆதலின் கடவுளர்கள் பல கோவைகளுக்குப் பாட்டுடைத் தலைவர்களாக அமைந்திருப்பது சமயகால வியற்கை என்று நாம் கொள்ள வேண்டும். அக மாந்தர்களுள் சிறந்த ஆள் தலைவியே; அவள் தன் பல்வகைப் பண்புகளுள் சிறந்தது கற்பே. உயிரினும் சிறந்தன்று நாணே நாணினும், செயிர்தீர் காட்சிக் கற்புச் சிறந்தன்று’ எனத் தொல்காப்பியர் தமிழ்நெறி காட்டினர். இத்தமிழ்மையை எல்லாக் கோவைகளும் நன்முறையில் வலியுறுத்துகின்றன. வெறியாட்டிலும், உடன்போக்குத் துறையிலும், பரத்தையர் பிரிவிலும் கற்புநெறிகளைக் கோவைப் புலவர்கள் சால்புபடப் புலப்படுத்தியுள்ளனர். ... -->

குழியில் விழுந்த களிற்றினை உய்விக்கும் பொருட்டுப் பெண் யானை மரங்களை ஒடிக்கின்றது; கரடி உணவிற்காகப் புற்றினை இரவில் தோண்டுகின்றது:வேங்கைபூத்ததும் திங்கள்