பக்கம்:இலக்கியச் சாறு.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியச் சாறு

111



உடன்போய தலைவன் என் மனைக்கு வருவானா? தன் மனைக்கே கொண்டு செல்வானா? தலைவனின் தாய் நம் வீட்டில் மணம் நடக்க இசைவாளா? என்று தலைவியின் தாய் ஆவல்கொள்கின்றாள்.புதல்வனை ஈன்ற எம்மேனியை முயங்க வேண்டா தாய்ப்பால் நின் மார்பழகைச் சிதைக்கும் என்று புலம்புகின்றாள் தலைவி. இவையெல்லாம் ஐங்குறுநூற்றுக் கருத்துக்கள். 'வேலினும் வெய்ய கானம், அவன் கோலினும் தண்ணிய தடமென்தோளே என்பது பட்டினப்பாலை. இச்சங்க நூற் கருத்துக்கள் எல்லாம் பற்பல கோவைகளில் கட்டளைக் கலித்துறை என்னும் புது யாப்புப்பெற்று விளங்குகின்றன. சங்க நூல்களும் கோவைகளும் என்பது ஒரு தனிக்கட்டுரைக்கு உரிய பொருளாகும் என்று கொள்க. குறள் பாய்ந்து வளஞ் செய்யாத் தமிழ் நூல்கள் இல்லை. மகளுக்கு மாலை சூட்டிய வரைவைக் கண்டு ஈன்றபொழுதிற் பெரிது உவந்தாள் தாய் என்பர்சிவப்பிரகாசர்கோழிகாலையிற்கூவுதல் வாய்மையாயினும் கொழுநனொடு கூடிய தன் இன்பத்தைச் சிதைத்துத் தீமை செய்தலின் பொய்யாம் என்று தலைவி திருக்குறளை நினைக்கின்றாள்.(திருவெங்கை 211)

போதவிழ் மென்மலர்ப் புன்னையங் கானல் பொருந்துமிந்த மாதவி பெற்ற மணிமே கலைநம்மை வாழ்விப்பதே

என்பது (36) அம்பிகாபதிக்கோவை. புன்னையங்கானல் பொருந்தும் இந்த மாதவி என்ற தொடர் சிலப்பதிகாரக்கானல் வரியையும், மணிமேகலை என்பது நூலையும் நினைவூட்டுகின்றன. கோவை என்பது சங்க இலக்கியங்களின் பாவை என்று மேற்காட்டிய செய்திகளால் வலியுறும். சங்க இலக்கியச்சிறப்பு -

சங்க நூற் கருத்துக்கள் கோவைகளில் நிரம்பிக் கிடப்பினும், கோவைகள் சங்க நூல்களுக்குக் கிட்டநிற்கும் தகுதியுடையனவல்ல. இரு வகை நூல்களும் அகப் பொருளையே பாடுகின்றன எனினும் இரண்டன் நெறியும் நோக்கும் வேறாயவை. ஒருவனுக்கு மனைவியும் மகளும் போலச் சங்கப்பனுவல்களும் கோவைகளும் ஆம். சங்க