பக்கம்:இலக்கியச் சாறு.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியச் சாறு

113



இலக்கியங்கள் இக்குற்றங்கள் இல்லாதனவாகலின் எக்காலத்தும் பெண்ணும், ஆணும் பயிலத்தக்கனவாகவுள: பேரவையிலும் பெருமிதவுணர்வோடு பேசத்தகையனவாக உள. மொழி நானத்தையும், கற்பனைக் கற்பையும் கோவை நூல்கள் சின்னஞ்சிறு நயங்கருதி பலியாக்கிவிட்டன. பெண் பாலின் உறுப்புக்கள் இந்நூல்களில் படாத கற்பனைப்பட்டுள. நாணிக் கண் புதைத்தல் என்னும் ஒரு

துறைக்கோவை நூல் படிப்பார் நாணிக்கண் புதைத்தற்குரியதாக நிற்கின்றது. நாணில் மொழியும் அளவில் கற்பனையும் பொதுவாகத் தமிழ் நூல்களிலும்

கட்டுப்பாடாகக் காதல் நூல்களிலும் வருதலாகா வருங்காலத் தமிழ் வளர்ச்சியில் இடைக்காலக் குறைகள் மறுமை எய்தலாகா என்பதற்காகவே, கோவை பாராட்ட எழுந்தது இம்மாநாடேனும், ஈண்டுச் சொல்லத் துணிந்தேன். யாண்டும் நம் நோக்கம் நற்றமிழ் வளர்ச்சியாகும். சமயகால இலக்கியம்

பிற்காலச் சிற்றிலக்கியங்களுள் கோவை தன்னேரில்லா இலக்கியமாகும். இதனைத் தொடர்நிலைச் செய்யுள் சிறுகாப்பியம் - என்பர் தண்டியுரையாசிரியர். ஒரு புலவன் ஒரு தனிப்பொருளை நீள நினைந்து பாடும் முழுச் சிந்தனையைக் கோவையில் பார்க்கின்றோம். புலவன்தன் சிந்தனைக் கோவை என்னும் பெற்றியுடையது இவ்விலக்கியம். சங்கத் தமிழர் இயற்கையொடு ஒன்றிய வாழ்வினர். அதனால் சங்க இலக்கியங்கள் முதற் பொருள் கருப் பொருள்களை நிரம்பத் தழுவிப் பாடுகின்றன. இஃது அக்காலத்திற்குப் பொருந்தும். கோவை பிறந்த காலத்துத் தமிழர் வாழ்வு சமய வாழ்வாக மாறிவிட்டது. சமயச் சார்பற்ற எதுவும் தமிழ்ச் சார்பற்றதாகக் கருதப்பட்டது. இலக்கியம் மன்பதைக் காட்டியாதலின், கோவைகள் பெரும்பாலும் தலக்கோவைகளாகத் தோன்றின. இலக்கியம் காலக்கோட்பட்டது என்பதற்குக் கோவைப் பிறவி ஒரு சான்று. .

சங்கவிலக்கியத்தின் இயற்கைச் சூழ்நிலையை இழந்த கோவைகள் சமயச் சூழ்நிலைப்பற்றி முன்னேறின;

இ.8.