பக்கம்:இலக்கியச் சாறு.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114

வ.சுப. மாணிக்கனார்



புதியநிலையால் முன்னில்லாத் தமிழாக்கம் செய்தன. சமய மெய்ம்மைகள், நாயன்மார் வரலாறுகள், புராணக் கதைகள் முதற்பொருள் கருப்பொருளுக்கு ஈடாகவந்து கோவைப் புலவர்க்கு உதவின. உவமைகளாகப் பயன்பட்டன.

பொய்யுடை யார்க்கரன் போலக லும்அகன் றாற்புணரின் மெய்யுடைய யார்க்கவன் அம்பலம் போல மிகநுணுகும்.

- (திருக்கோவை: 48)

தலைவியைப் பிரியும் தலைவன் அவள்தன் தினைப்

புனத்துத் தெய்வப்பத்தியை உவமப் படுத்துகின்றான். யானைக்கு அஞ்சிய தலைவியைத் தலைவன் இடப்பக்கத்துத் தழுவிக் கொள்கிறான்; அவன் வலப்பக்கம் யானையின் புண்ணுமிழ் குருதியால் செந்நிறம் ஆகின்றது. அண்ணலை ஆயிழை பாகன் என்று அஞ்சினம் (தஞ்சைவாணன்:302) என அறத்தொடு நிற்கும் தோழி செம்மேனி யெம்மானாகத் தலைவனை உருவகஞ் செய்கின்றாள். உடன்போய மகளுக்கு ஒரு நற்றாய் வருந்தினாள். எப்படியும் மகளைத் தேடிக்கொனாவேன் என்று செவிலி ஆறுதல் கூறுதல் வழக்கம். நிலத்தில் மறைய முடியாது. வானத்தில் ஏறமுடியாது, இதற்குள் கடல்வழியாகச் சென்றிருத்தலும் ஒல்லாது; அடுத்த நாட்டிலோ அடுத்த ஊரிலோ அடுத்த வீட்டிலோதாம் உடன்போக்கினர் மறைந்திருப்பர். நாடு நாடாக, ஊர் ஊராக, வீடு வீடாகத் தேடிக் கண்டுபிடிப்பேன்’ என்று குறுந்தொகைச் சங்கச் செவிலி சொல்லுகின்றாள். இஃது இயல்பான பேச்சு,

அருகாத அன்புடன் இன்புற மேல்வந் தடுகளிற்றைப்

பொருகாளை பின்கரம் போயினள் என்று புலம்பிநையேல்

குருகார் கமலக் கொடிதங்கு தேயம் குறுகியவர்

ஒருகாலி னுக்கும் ஒருகை யினுக்கும் உட்பட்டதே.

- - (அம்பிகாபதி - 369)

என்பது சமயச் செவிலியின் ஆறுதலுரை. உலகம் பெரிதன்று; குறளுருவாகிய திருமாலின் ஒரடியால் அளக்கப்பட்ட சிறியது; கடலையுண்ட அகத்தியரின் ஒரு பிடிக்குள் அடங்கிவிட்ட குறியது. அதனால் உடன்போகியாரை ஓரடி வைத்தால் ஒரு கையால் பிடித்து விடலாம் என்பது செவிலியின் கருத்து.