பக்கம்:இலக்கியச் சாறு.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியச் சாறு

115



இவ்விலக்கிய நெறி புராண காலத்தில் எழுந்த இலக்கியங்கட்குப் பொருந்துவதே. சிறந்த கண்ணப்பர் இறைச்சியைச் சுவைத்து இலையில் வைத்துக் காளத்தியப்பருக்குப் படைத்தார் என்பது வரலாறு. பகற்குறிவந்து நீங்கும் தலைவனை விருந்தாக அழைக்கின்றாள் குறக்குடித் தோழி. 'நும் வேண்டுகோளை மறுப்பது எப்படி? குறமகன் ஊட்டிய எச்சிற் கறிதானே இறைவனுக்கு உவப்பாயிற்று’ என்று திருவெங்கைக் கோவைத் தலைவன் வாயூறி உடன்படுகின்றான்.

திருமகள் தாமரையில் வாழ்கின்றாள் என்றும் கதிரவன் தாமரையைத் திறப்பான், திங்கள் அதனை மூடுவான் என்றும் புராணம் புனைந்து கூறும். இப்புராணச் செய்தியைப் பொருட்படுத்திக் கோவைப் புலவர்கள் மேலும் செய்த கற்பனைத் திறங்கள் எண்ணில. தலைவியைத் திருமகளாகவும், அவள் இல்லத்தைத் தாமரையாகவும் கொண்டு தலைவன் பலபடப் பாராட்டுவான். இரவுக்குறியில் வந்த காதலன் தலைவியைக் காணவில்லை."இங்கு அவள் எப்படிவரமுடியும், அவள் வாழும் தாமரைமனை மாலையில் அடைக்கப்படும். யாரும் திறந்துவிட்டாற்றானே அவள் வெளிவர இயலும்? என் காதலியின் திருமனையைத் திறப்பார் ஒருவர், அடைப்பார் ஒருவர் என்று அல்ல குறிப்பட்ட வெங்கைத் தலைவன் புலம்புகின்றான். இருவர் திறந்தடைக்கின்ற தன்றோ நெஞ்சமே நம் திருமனையே’ என்று அவலிக்கும் தலைவன் கருத்தில் திருமறைக் காட்டினைத் திறந்தடைக்கப் பாடிய நாயன்மார்கள் செயல் புலனாகின்றது. இரவில் என்னைக் காணவேண்டுமென்று நீ தாமரை மாளிகையைப் பகற் காலத்தே விட்டுவந்தாயோ' என்று கனிந்து மொழிகின்றான் ஒரு காதலன். .

கைத்தி கிரிப்புயல் காணாத பாதர் கமலையுறை மெய்த்திரு வேயிருட் போதுவந் தாயந்த வெங்கதிரோன் அத்திரி மேனின் றிதழா யிரமுமடைத் துவண்டாம் முத்திரை யிட்டதன் றோவென்றும் நீவைகும் முண்டகமே. - (திருவாரூர்க் கோவை: 207)