பக்கம்:இலக்கியச் சாறு.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியச் சாறு

125



தொண்டிப்பத்து (171-810) என்ற தலைப்பில் வரும் பாடல்கள் இயற்கைப் புணர்ச்சி, பாங்கற் கூட்டம், தோழியிற் கூட்டமாகிய களவுக் கிளவிகளை முறைபடக் கூறுகின்றன. சங்கவிலக்கியத்தில் ஒரு நெடும் பாட்டிலும் ஒரு பத்துப் பாட்டிலும் மறைந்து கிடைந்த கோவையமைப்பை ஒரு நூற்கோவையாக்கி வளர்த்த நம் இடைக் காலச் சான்றோரின் புதுத்திறம் மெய்யான கல்வித் திறமேயாகும். ஒரு துறைக் கோவையின் தோற்றமும் சங்கப் பிறப்பு உடையது. மடல் பாடிய மாங்கீரனார் வெறி பாடிய காமக் கணியார் என்ற அடைகளை நோக்குழி, இவரெல்லாம் மடற்றுறையிலும் வெறித்துறையிலும் பாடல் பல யாத்த ஒரு துறைக் கோவையினர் என்று ஊகிக்கலாம். கயமனார், மகட் போக்கிய தாய் வருந்தும் துறையில் பதினேழு செய்யுட்கள் கோத்திருக்கக் காண்கிறோம். ஆதலின் இடைக்கால ஒரு துறைக் கோவையும் சங்க மூலம் உடையது என்பது தெளிவு. மொழிக்காப்பு

தமிழ்மொழி வளரும் இக்காலத்து முன்னூல்களை ஒதுக்கிப் படிக்கும் வழக்கம் வளரக்கூடாது. எல்லாரும் எல்லா நூல்களையும் படிப்பது என்பது முடியாது.எனினும் சிலர் சில துறை நூல்களைக் கற்கலாம்; வேறு சிலர் வேறு சில துறை நூல்களை கற்கலாம். ஆகக் கூடிய எல்லா நூல்களும் நாட்டில் கற்கப்படவேண்டும். அப்போதுதான் குறைவற்ற வளர்ச்சி தமிழுக்கு உண்டாகும். கற்கு முயற்சியும் அன்பும் ஆர்வமும் பெருகினாற்றான் நூல்கள் வாழும். தமிழர் வாழ்வும் உயர்வும் நிலையும் எல்லாம் தமிழின் வாழ்வையும் உயர்வையும் நிலையையும் பொறுத்தன என்பது கண்கூடு. மொழிக் காப்பு என்பது அம்மொழியில் தோன்றிய நூற்காப்பாகும். ஆதலின், தமிழன்பர்களே! தமிழ் இளைஞர்களே! தமிழ்க் குடிமக்களே! தும் இல்லமெல்லாம் தமிழ் நூல் இல்லமாக விளங்குக.நும் அகமெல்லாம்தமிழொளிபரவுக.நும்மனையெல்லாம்தமிழ்ப் புத்தகமாக இலங்குக என்று வாழ்த்துவன்.