பக்கம்:இலக்கியச் சாறு.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. தைப்பாவை

'இன்னும் எழுத எண்ணங்கள் அதிகம் எதிர்காலத்தில் இறைவன் அருளுவான்’ -

என்பது கண்ணதாசன் வேண்டுகோள். பொன்னாண்டு எய்திய கவிஞர் கண்ணதாசனுக்கு நாமும் இறைவனிடத்து விடுக்கும் வேண்டுகோள் இதுவே. பாரதியார், பாரதிதாசன், கண்ணதாசன் மூவரும் இந்நூற்றாண்டில் தோன்றிய மக்கட் பெருங்கவிஞர்கள். உரைநடை வெள்ளம் பரந்து சாடிக் கவிதைக் கரையை இடித்துத் தகர்க்கும் இந்நூற்றாண்டில் தமிழினத்தின் கவிதையுள்ளம் உடையாமல் ஊறுபடாமல் காத்துத் தந்த பெருமை இம்மூவர்க்கும் உண்டு. இம்மூவருள் இன்று நம்மோடு வாழும் கண்ணதாசனார், கவிதை வாழக் காலமெல்லாம் வாழ்க.

கங்கைநீர் காவிரிநீர் போலப் பெருங்கவிஞர்கள்பால் ஒவ்வொரு தனிநீர்மையுண்டு. தனிநீர்மை அல்லது தனித் தன்மை என்பது பிறர் பின்பற்ற முடியாததாய் ஒருவரிடத்தே இலங்கிக் கிடக்கும் தனியுயிர்ப் பண்பாகும். பிறரும் பின்பற்றக் கூடியதாக இருந்தால் அப்புலமைக்கூறு புகழுக்குரிய கூறாகாது. 'கவிஞனின் பயணமோ தனிமை தனிமை என்பது கண்ணதாசம், கண்ணதாசன் பாடிய திரைப்பாடல் முதலான எவ்வகைப் பாடல்களிலும் ஒரு தனியோட்டம் உண்டு. யாப்பிலக்கணத்தை நினைவுகொள்ளாமல் ஒசையினாலேயே யாப்பமைதி விழும் வண்ணம் பாடவல்ல இயல்பான திறமையை இவரிடம் காணலாம். அதற்குக் காரணம், எப்போதும் கவிதை யாத்திரை. ஆய தமிழோசை வரப் பாடுவதில் ஆசைவர ஆனவரை பாடுகின்றேன்’ என்று இவரே உணர்ந்து கூறுவர். ஒசை வழிப் பாடுவதில் இடைக்காலப்

கவிஞர்கண்ணதாசன்பொன்விழாமலர்-1976