பக்கம்:இலக்கியச் சாறு.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியச் சாறு

127



புலவரோடு கண்ணதாசன் ஒத்திருந்தாலும் அப்புலவர்கள் பால் இருந்த, பொருளோட்டத்திற்குத் தடையான யமகம் மடக்கு திரிபு என்ற யாப்பு விளையாட்டுக்கள் இவர்பால் இல்லை. வாழும் மனிதரை வாழ்த்தியும் வைதும் நெஞ்சு திறந்து பாடும் சங்கச் சான்றோர்களின் செம்மை இயற்கையுள்ளம்,மீண்டும் கண்ணதாசன் கவிதைகளில் மறுமையெய்தியுள்ளது. கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் சங்க இலக்கியக் கொள்கை இருபதாம் நூற்றாண்டில் இக்கவிஞரின் பாடல்களில் தலையெடுத்திருப்பது என்றுமுள தென்தமிழ் என்பதற்கு எடுத்துக்காட்டு.

பாப்புக்கு முறையின்றிப் பணிவின்றிப் பொருளின்றிப் பாடுவர் வளர்வ துண்டோ எனவே நல்ல பாடற்கு முறையும் பணிவும் பொருளும் வேண்டும் என்பது கண்ணதாசம். இவர்தம் கவிதைகளை ஆராய்வார் இம்முத்தடத்தில் நின்று ஆராயலாம்.

கண்ணதாசன் காலத்தின் மேடுகளிலும், பள்ளங்களிலும் வேகமாக ஓடி விளையாடிய கவிஞன், சங்கப் பரணர் கபிலர் போல அரசியலில் வாடையையும் தென்றலையும் கண்டவர்; தம் உணர்ச்சிக்கு முடியும் பூட்டும்போடாதவர்;தம் அறிவுக்குச் சுவரும் கதவும் செய்யாதவர்; அரசு, சமயம், இனவாயம் எத்துறையிலும் காலந்தோறும் கருத்து வளர்ச்சி பெற்றவர்; தன்னியல்பைத் தானறிந்த கவிவலவர். -

கொள்கைகளில் மாறுபட்ட காரணத்தால் கவிதைகளில் முரண்பாடுகளும் காணப்படுகின்றன. ஒவ்வொன்றும் அன்றாட உணர்ச்சிகளில் விளைந்த கவிதைகளாதலின் பலவகையான உணர்ச்சிகள் கொழுந்து விடுகின்றன. வாழும் மனிதர்களைப் பற்றிய கவிதைகள் அதிகம் என்பதால் முரண்பாடுகள் இயற்கையாகவே எழுந்துவிட்டன.

என்பது கண்ணதாசன் தன் கவிதைகட்குத் தானே வழிகாட்டும் வரலாற்றுப் பதிகம். இவர் எழுத்துக்களில் தலைவர்கள் வரலாறும், நாட்டு வரலாறும், கட்சி வரலாறும், தன் வரலாறும் நரம்புபோல் பின்னிக் கிடக்கின்றன. இவ்வளவு