பக்கம்:இலக்கியச் சாறு.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132

வ.சுப. மாணிக்கனார்



எந்தமிழர் கோட்டத் திருப்பார் உயிர்வர எந்தமிழர் உள்ளத் தினிமைப் பொருள்மலர எந்தமிழர் கைவேல் இடுவெங் களஞ்சிவக்க எந்தமிழர் நாவாழ் இளமைத் தமிழ் செழிக்க எந்தமிழர் இல்லத் திலங்கும் ஒளிவிளங்க முந்துதமிழ்ப் பாவாய் முன்னேற்றந் தான்தருவாய் தந்தருள்வாய் பாவாய் தைவடிவத் திருப்பாவாய் வந்தருள்வாய் கண்ணால் வாழ்த்துரைப்பாய் தைப்பாவாய் வாழ்த்துப்பாவில் வரும் கொள்கைக் கேற்பவே தைப்பாவைப் பாடல்கள் பெரும்பாலும் அகப்பொருள்மேல் அமைந்துள. தைத் திரு மணம் தமிழர் விரும்பும் திருமணம் ஆதலின் களவு வழி ஒழுகும் காதலர்கட்கு அவனோடு அவள் சேர இத் தைத்திங்களில் ஒர் நாள் எடுத்துக் கொடுக்க மாட்டாயா தைப்பாவை என்று ஒரு பாட்டு கேட்கின்றது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது பழமொழி. ஆதலின் கணவனைப் பிரிந்து துயில் கொள்ளாது தன் நெஞ்சே துணையாகக் கையே போர்வையாகத் தலையணையிற் கண்மூடி இரவு போகாதோ? அவன் வரும்நாள்வாராதோ? இத் தைத்திங்களில் வழி பிறவாதோ? என்று நம்பியிருக்கும் மனைவியர்க்கு அவனை வரச்செய்து உறக்கம் நல்குவாய் தைப் பாவாய் என்று ஒரு பாட்டு அறிவுறுத்துகின்றது. பிரிந்து வருந்துவாளிடம் தூது செல்; காதலுக்கு இது காலம் என்று இயம்பு, குழந்தை அழுகின்ற நிலையிலும் மனைவியைக் கைச் சிறையில் வைத்த கணவனைத் தள்ளியிருக்கச் சொல்; ஊருலகம் காணத்திருமணத்துக்கு உதவுவாய்; வாடைதவிர்க்க வருவாய்; பொற்றாலி காட்டி முடிப்பாய்; மெத்தை விரித்த நங்கைபாற் சென்று தேற்றாய் என்று பல பாடல்கள் களவு நிலையிலும் கற்பு நிலையிலும் தைப் பாவையை விளித்து வருகின்றன. இன்பத்துறை பற்றிப் பர்டுவது முன்னிரு சமயப் பாவைகட்கு முரணில்லை. அப்பாவைபாடும் பெண்கள் 'அன்னவரே எங்கணவர் ஆவார் எனவும், நீ உன் மணாளனை எத்தனை போதும் துயிலெழ வொட்டாய் காண்’ எனவும். இல்லறம் பற்றிக் கூறும் கருத்துக்களை ஒப்பிடுக.