பக்கம்:இலக்கியச் சாறு.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியச் சாறு 433

எத்தனையோ ஆட்சிகள் வந்து போகினும் எக்காலத்தும் தமிழகத்தைச் சேர, சோழ, பாண்டிய நாடுகளாக வைத்துப் பாடுவது ஒரு வழக்கு. ‘தென்னவன் சேரலன் சோழன் சீர்ப்புயங்கன் வரக்கூவாய்' என்று திருவாசகக் குயிற்பத்து பாடுகின்றது. இம் மரபுக்கு நம் கவிஞரும் விலக்கல்லர்.

அம்பனைய கண்ணாள் அருள்விளங்க மீனாளும் தென்மதுரை மண்ணில் திரண்டெழுவாய் தைப்பாவாய் கட்டான மேனியொடும் களம்போந் துயர்ந்தநிலம் பட்டாளத் தஞ்சையிலும் பாடாயோ தைப்பாவாய் தருஞ்சேரன் பெற்றறியான் தழைக்குங்கோன் வஞ்சியிலும் நிறையாயோ உலவாயோ நிலவாயோ தைப்பாவாய். இப்பாவைசமயப்பாவையாக இன்றித்தமிழ்ப்பாவையாக இருந்தாலும் தமிழும் ஒரு தெய்வப்பாவையல்லவா? ஆதலின்,

அன்னங்கேள் ஞானம் அருள்வானை முன்னிருத்தி முன்னங்கால் சேர்த்து முழந்தாளில் மண்டியிட்டு தன்னங்கை கூப்பித் தலைசாய்த்து யான்வணங்க என்னங்கேள் ஈசன் எனக்களித்தான் மெய்ஞ்ஞானம் எனவரும் அரிய தைப்பாவை நல்ல ஒரு மெய்ப்பாவையாகும். கவிஞர் கண்தாசன் அரசியல் போலும் துறைகளில் மாறுபட்டு மாறுபட்டுச் செல்லினும் தமிழ் என்ற தாய்த் துறையில் என்றும் நெறிபிறழாத் தவ மகனாகக் கவிமகனாக விளங்கி வருகின்றார். 'தருமத்தில் வந்ததால் தாயாரின் ஆசையால் தமிழில்நான் வாழுகின்றேன்’ என்றுதன் வாழ்க்கை தமிழ் சார்ந்தது என்பதனைக் கவிஞர் பெருமிதத்தோடு பாடியிருக்கின்றார். கணவன்மேற் கொண்ட கற்புடை நங்கையின் பற்று என்றும் ஒரு சீராக இருப்பது போலத் தமிழன்னைபாற் கொண்ட கவிஞரின் பற்று சூழ்நிலையால் கூடியது குறைந்தது என்பதற்கு இடமின்றி என்றும் குறைவிலா நிறைவாக இருப்பதை நாம் உணர்கின்றோம். 'சொல்லுக்குச் சொல்லோர் சுவையிருக்கும் செந்தமிழ் எனவும், 'தாயாணை தமிழானை' எனவும். தன்னைப் புகழத் தன்னிடத்தோர் சொல்லில்லாத தமிழ்’ எனவும் எண்ணிறந்த தமிழ்மாலை