பக்கம்:இலக்கியச் சாறு.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. சங்கத் தமிழ் மாலை

ஆண்டாள் அருளிய திருப்பாவை சங்கத் தமிழ் மாலை’ என்று பெயர்பெறும்.'பட்டர்பிரான்கோதை சொன்ன சங்கத் தமிழ் மாலை முப்பதும் என்பது திருப்பாவையின் முப்பதாவது பாடலில் வரும் தொடர். திரள் திரளாக அநுபவிக்கவேண்டிய தமிழ் மாலை என்று பொருள் செய்யும் மரபுண்டு. சங்கம் என்பதற்கு மக்கள் கூடியிருத்தல் என்ற பொருள் இருத்தலின், இவ்வாறு கருத்துக் கூறப்பட்டது. 'சங்கமிருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம் (22) என்ற திருப்பாவைத் தொடருக்குத் திரள் திரளாக இருப்பது எனப் பொருள் செய்திருப்பது பொருந்தும். ' அத்தொடரின் அமைப்பு அத்தகையது. சங்கத் தமிழ் மாலை என்ற வண்ணத் தொடரில் தமிழுக்கு அடையாகச் சங்கம் வரும்போது, திரள் என்ற பொருள் மரபும் இல்லை, நயமும் இல்லை. தீந்தமிழ் செந்தமிழ் முத்தமிழ் என்பது போலச் சங்கத் தமிழ் என்ற தொடராட்சிக்குப் பண்டைத் தமிழ்ச் சங்கங்களைக் குறிக்கும் நெறியுண்டு. 'சங்கத் தமிழ் மூன்றுந்தா என்பர் ஒளவையார். சங்கப் புலவர், சங்கப் பலகை என்று சொல்வதையும் ஒப்பு நோக்குக.ஆதலின் திருப்பாவையில் வரும் சங்கத்தமிழ் மாலை என்ற இனிய தொடருக்குப் பண்டைச் சங்கத் தமிழ் வனப்பு அமைந்த பாசுரத் தொகுதி எனப் பொருள் செய்வதே தகும். இங்ஙனம் கோடல் வலிந்துரையன்று முப்பது பாசுரங்களின் திணையமைப்பும் கருப்பொருட் காட்சியும் முல்லைப் பின்புலமும் சங்கத் தென்றலை வீசுகின்றன. நாச்சியார் திருமொழியும் இதற்கு விலக்கன்று.

அனைந்திந்தியப்பல்கலைக்கழகத்தமிழாசிரியர்மன்றம்பத்தொன்பதாவது கருத்தரங்கு-1987-திருப்பதிதிருக்கோயில்-1987 சூன் இதழ்.