பக்கம்:இலக்கியச் சாறு.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136

வ.சுப. மாணிக்கனார்



இருமடைகள்

திருப்பாவைக்கும் மணிவாசகர் அருளிய திருவெம்பாவைக்கும் யாப்பு முதலிய சில வகையில் ஒற்றுமையுண்டேயன்றிப் பாத்திரங்களிலும் பின்புலங்களிலும் நோக்கங்களிலும் சொல்லாட்சிகளிலும் பெரிதும் வேற்றுமையுள. திருப்பாவைக்குப் பின்புதான் திருவெம்பாவை தோன்றியது. ஆண்டாள் மனநிலை வேறு மணிவாசகர் மனநிலை வேறு. நாயன்மார்களும் ஆழ்வார்களும் நாயகி நாயகன் பாணியிற் பாடியிருந்தாலும், அது மேட்டு மடையாகும் எனவும், காம மெய்ப்பாட்டிற்காகப் பெண்ணுடையுடுத்துப் பேசினார்கள் எனவும் இயல்பின்மை காட்டுவர் உரை விளக்கிகள். ஆண்டாள் காமம் பள்ளமடை எனவும் இயல்பான பெண்ணுடையோடும் உடலோடும் உள்ளத்தோடும் ஏற்பட்ட தெய்வக் காதல் எனவும் கோதையார் வரலாறு காட்டுகின்றது. ‘மானிடவர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன்' என்பது ஏற்றிக் கொண்ட உணர்வன்று; பிறந்த நாள் தொட்டு வளர்ந்த உள்ளுணர்வு.இதனை மானிடப்பெண்டிர் நயந்த பக்கம் என்று பாடாண் பகுதியாகப் பொருளிலக்கணம் வகைப்படுத்தும். ஆண்டாள் காதலுணர்வு"சங்கென்னும் சக்கரம் என்னும் துழாய் என்னும் என்பது போலவும் தலைப்பாட்டாள் நங்கை தலைவன் தாளே என்பது போலவும் நாயகன் நாயகி பாணியாகாது என்று தெளிக.தமிழிலக்கிய வரலாற்றில் கடவுள் மாட்டு மானிடப் பெண்டிர் நயத்த துறைக்கு ஒரேயொரு எடுத்துக்காட்டுத் தான் உண்டு. அஃது ஆண்டாள் காதலாம். பாடிச்சூழ்நிலை

திருப்பாவையை நல்லுருத்திரன் பாடிய முல்லைக் கலியோடும் சிலப்பதிகாரத்தின் ஆய்ச்சியர் குரவையோடு ஒப்பாடு செய்யின், திருப்பாவை சங்கத் தமிழ்மை கொண்டது என்பது தெளிவாகும். கோதையை எடுத்து வளர்த்த விட்டு சித்தன் குலம் இடைக்குலம் இல்லை. துளவச் செடிக்கண் கண்டெடுக்கப்பட்டவள் என்பது கதையாதலின், கோதையின் பிறப்புக்குலமும் அறிதற்கில்லை. ஆனால் பெரியாழ்வார் திருமொழி,

வண்டமர் பூங்குழல் ஆய்ச்சி மகனாகக் கொண்டு வளர்கின்ற கோவலக் குட்டற்கு