பக்கம்:இலக்கியச் சாறு.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியச் சாறு 137

கற்றினம் மேய்த்துக் கணிக்கொரு கன்றினைப் பற்றி யெறிந்த புரமன் திருவடி என வாங்கு கண்ணபிறப்பையும் ஆய்ப்பாடிச் சூழ் நிலையையும் நந்தகோபாலன் அசோதை குடும்பத்தையும் புனைவதைக் கற்கின்றோம். ஆதலின் புதுவைப் பட்டர் பிரான் மகளாக வளர்ந்த கோதையும் திருப்பாவையிலும் திருமொழியிலும் தந்தையின் தடத்தையே பின்பற்றினாள். தந்தை-மகள் பாசுரங்களை ஒப்பியம் செய்யின், காணக்கிடக்கும் பொதுக் கூறுகள், பல. பெரியாழ்வார் திருமொழியின்பிற்பகுதி கோதை தென்னரங்கனின் சோலைக் கிளியான பின் பாடப் பெற்றதோ என்று கருத இடனுண்டு.

ஒருமகள் தன்னை யுடையேன் உலகம் நிறைந்த புகழால் திருமகள் போல வளர்த்தேன் செங்கண்மால்தான் கொண்டு போனான் பெருமகள் ஆய்க்குடி வாழ்ந்து பெரும் பிள்ளைபெற்ற அசோதை மருமகளைக் கண்டுகந்து மணாட்டுப் புறஞ் செய்யுங் கொல்லோ என்ற பாசுரம் பெரியாழ்வாரின் ஏக்கத்தைக் காட்டும். இதனால் கோவலச் சூழலிலும் கண்ணன் ஈடுபாட்டிலும் கோதை தந்தையால் வளர்க்கப்பட்டவள் என்பது போதரும். பட்டர்பிரான் பிறப்புக் குலம் வேறாக இருந்தாலும், அவர்தம் இல்லம் ஆய்ப்பாடியாக விளங்கிற்று எனவும் அதற்கேற்பச் கரும்பார் குழற்கோதை நல்லாளும் ஆயர் குலச் செல்வச் சிறுமியர்கள் சூழவிளையாடிவளர்ந்தாள் எனவும் எண்ணலாம். கோதையாய்ச்சி

ஆண்டாள் தன்னை இடைக்குல மகளாகவும் தன்னொடு விளையாடும் தோழியரை ஆயர்குல மங்கையராகவும் தன் இல்லத்தை ஆய்ப்பாடியாகவும் கருதிக் கொண்டும் பாவையும் திருமொழியும் பாடினாள் என வழங்கி வரும் பாவனைக் கருத்துப் பொருந்தாது. பாவனைச் செய்யுளாக இருந்தால், சூடிக்கொடுத்த நிகழ்ச்சிக்கோ, வேங்கடவதற்கு என்னை விதிக்கிற்றியே என்றதொழுகைக்கோபொருளில்லாது ஒழியும். சிலப்பதிகார ஆய்ச்சியர் குரவையில் இடைக்குலமே குரவையாடுவது போலத் திருப்பாவையிலும் இடைக்குலமாக வளர்ந்து வந்த் கோதை அக்குலத்துள் ஒருத்தியாகவே ஆய்க்குலப்பிற சிறுமியரொடுபாவை நோன்புகொள்கின்றாள்: