பக்கம்:இலக்கியச் சாறு.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியச் சாறு 141

மனவொடுக்கம்

தாயுமானவர் செய்யுட்கள் நெஞ்சைத் திருத்தும் அடிப்படை நோக்கமுடையவை. மனவொழுங்கே இவர் காட்டும் மதவொழுங்கு. நல்லவை கெட்டவைக்கெல்லாம் மனமே மூலம் என்று கண்ட இப்பெருந்தவர் அதனை அடக்கவும் ஒடுக்கவுமே பாடுபட்டுள்ளார் என்பதனை இவர்தம் பாட்டுக்கள் வெளிப்படையாகக் காட்டுகின்றன.

பாழான என்மனம் குவியவொரு தந்திரம்

பண்ணுவது உனக்கருமையோ? (աf 9) நானென்று நீயென்று இரண்டில்லை என்னவே

நடுவே முளைத்த மனதைக் கட்டவறி யாமலே வாடினேன் எப்போது

கருணைக் குரித்தா வனோ? (கருணா. 4) கள்ளமனக் கப்பலெங்கே காணும் பராபரமே (பரா. 212) இவ்வாறு மனத்தைப் பலகாலும் சாடுவர் தாயுமானவர். ‘சிந்தையற நில்’ எனவும் 'சும்மா இரு’ எனவும் மெளனகுரு வழங்கிய நிறைமொழியைக் கடந்து நெஞ்சம் எங்கெங்கோ ஒடித்திரிகின்றது. இறைவனைக் கும்பிடும்போது மனம் முழுதும் ஈடுபடவில்லை. எதனையோ நினைத்துக் கொண்டு அரைக் கும்பிடு செய்கின்றது. மனம் குவியாத போது மலர்ப்பூசை செய்தல் முறையா? ஆதலின் எத்தனையோ வல்ல சித்தர்கணத்தைப் பார்த்து, சித்து என்ற அனலால் என் மனக் கல்லை மெழுகாக்கி வைக்கக் கூடாதா என்று வேண்டுவர் அடிகள். நல்லவர் யார்? கற்றோர் எல்லாம் நல்லவர் ஆகார்; கல்லாதவர் எல்லாம் கெட்டவரும் ஆகார்: மனத்தை அடக்கியவர் யாரோ, மனத்திலிருந்து உணர்ச்சியைக் கிளர்ச்சியை அடக்கிக் கொண்டவர் யாரோ அவரே நல்லவர் என்பது அடிகளின் விளக்கம். தற்சிறுமை

இறைவனை அடையப் பெறாமையினால் தாயுமானவர் படும் அவலவுணர்வுக்கு எல்லையில்லை. தம்மைத் தாமே நொந்து கொள்ளும் தற்சிறுமைக்கும் எல்லையில்லை.