பக்கம்:இலக்கியச் சாறு.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியச் சாறு 145

அடிகளார்க்கு ஒரே சினம், அதனை ஒரு கை பார்க்கும் முழுச்சினம். உன்னைச் சாகடித்து நான் வாழ முடியுமேயன்றி இனி உன்னோடு உடன் வாழ்தல் அரிது என நெஞ்சு நோக்கி வஞ்சினம் கூறுவர் தாயுமானார்.இவர் வஞ்சினக் கூற்றில் ஒரு முரண் உண்டு என்று அறியவேண்டும்.

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் முப்பது ஆண்டு கட்கு முன் நடந்த ஒரு நிகழ்ச்சி. மறைமலையடிகளார் பல்கலைக் கழகப் பேரவையில் ஆயிரக்கணக்கான மாணவர் முன்னும்ஆசிரியர் முன்னும் தமிழர்நாகரிகம் குறித்துத்தமக்கே உரிய இனிய குரலில் சொற்பொழிவு ஆற்றினர். ஆற்றி வரும்போது அயல் நாகரிகக் கலப்பினை எடுத்துக் காட்டினர். காட்டிவரும்போது உள்ளம் கொதித்துச் சினம் தோன்றி, தமிழர்க்கு ரோஷம் வேண்டாமா என்றுகேட்டனர்.ரோஷம் என்ற வடசொல்லை அச்சமயத்துப் பயன்படுத்தியவர் யார்? தனித்தமிழ் இலக்கியத் தந்தை மறைமலையடிகள். தமிழுக்கு வந்த கேட்டினை நினைக்கும்போது உள்ளத்துச் சினம் பொங்கிக் குறிக்கோளுக்குப் புறம்பான சொல் வந்துவிடப் பார்க்கின்றோம். +

கொல்லா நோன்பு o

கொல்லாமை எத்தனை குணக்கேட்டை நீக்கும்

(ஆனந்த, 1) கொல்லா விரதம் குவலயமெல் லாம்.ஒங்க எல்லார்க்கும் சொல்லுவதென் இச்சை பராபரமே

(uցր.54) கொல்லா விரதமொன்று கொண்டவரே நல்லோர்மற்று அல்லாதார் யாரோ அறியேன் பரபரமே (பரா. 1921

மேலைச் செய்யுட்கள் கொல்லா நோன்பினைக் குறிக்

கோளாகக் கொண்டவர் தாயுமானவர் என்பதனைத்

தெளிவாகக் காட்டும். கொல்லா விரதம் ஒருவன்

கொண்டானேல் ஏனைய கெடுகுணங்கள் எல்லாம் நீங்கிவிடும்

என்பதும், உலகமெங்கும் இவர் பறைசாற்ற விரும்பும் இயக்கம்

தொல்லாமையே என்பதும் தெளிவாகும். எத்துணை

. I O .