பக்கம்:இலக்கியச் சாறு.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. காந்திக் கவிதை

“காந்திக் கவிதை' என்னும் நூல் அழகப்பா கல்லூரித் தமிழாராய்ச்சித் துறையின் மூன்றாவது வெளியீடு. முன்னை வெளியீடுகளான 'கம்பனும் சிவனும்', 'வில்லியும் சிவனும்’ என்ற இரு பனுவல்களும் ஆராய்ச்சி இனத்தைச் சார்ந்தவை: காந்திக் கவிதை என்ற இப்பதிப்பு படைப்பினத்தைச் சார்ந்தது. பழைய நூல்கள் ஆராய்ந்து அமைவதே ஆராய்ச்சித்துறையின் நோக்கம் என்று கருதிக்கொண்டிருக்கின்றோம். இக்கருத்து ஒரளவே பொருந்தும். பல்கலைக்கழகங்களில் புது நூற் படைப்புக்குத் தனித்துறை இன்றில்லை; இல்லாதவரை உள்ள ஆராய்ச்சித்துறையே படைப்பியலையும் மேற்கொள்ள வேண்டும். முன்னோர் படைத்தளித்த பனுவல்களை ஆராயும் நாம் பின்னோர் ஆராயும் வண்ணம் சிலவேனும் புதியன ஆக்கிப்படைக்க வேண்டாமா? கதிரறுப்பவர்க்குவித்திடலும் கடன்.படைப்பு என்பதுமூலநூல்; ஆராய்ச்சி என்பது வழிநூல். வழிநூல் இரண்டு வெளியீடு செய்த அழகப்பா கல்லூரி ஆராய்ச்சித்துறை, பல்கலைக் கழக ஆராய்ச்சித்துறைக்கு ஒரு வழிகாட்டியாக, இயக்குநர் தமிழ்க்கடல் இராய.சொ.படைத்த மூலநூலை வெளியிடுகின்றது என்பதனைப் பெருமிதமாகச் சுட்டிக் காட்ட விழைகின்றேன். காந்தியே தலைவர்

காந்திக் கவிதைநூல் காந்திபிள்ளைத் தமிழ் முதலாகக் காந்தி இரங்கற்பா ஈறாக 38 பிரிவுகொண்டது. பிறப்பொடு தொடங்கி இறப்புவரை கூறுதலின், இந்நூல் முழுவடிவுடையது என்று கண்டு கொள்ளலாம். 885 செய்யுள் உடையது. இச்செய்யுட்கள் வெண்பா, அகவற்பா, ஆசிரியத்தாழிசை, அறுசீர் எண்சீர் பன்னிரு சீர்ச் சந்த

அழகப்பாகல்லூரி,காந்திக்கவிதை வெளியீடு-1969.