பக்கம்:இலக்கியச் சாறு.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியச் சாறு

13



எழுத்தாளர் வாழ்வுவளம்

தமிழ் எழுத்தாளர்கள் பொருளாதாரத்திலும் நல்ல தலையெழுத்து உடையோராக, வறுமைக் கோட்டிற்குக் கீழே தாழாமல் வாழ்வுக் கோட்டிற்கு மேலே இருப்பவர்களாக வாழவேண்டும் என்பது என் முதற்சிந்தனை. எங்கள் முன்னோர்களை வேறு வகையில் எல்லாம் பின்பற்ற நாங்கள் ஆயத்தமாக இருக்கின்றோம். பெருஞ்சித்திரனார் பாரதியார் வ.உ.சி. அரசஞ்சண்முகனார் போன்ற பல பெருமக்கள் வறுமையில் உழன்று கன்னித் தமிழைக் காத்தனர். நாங்கள் அந்த ஒரு வழியைப் பின்பற்ற விரும்பவில்லை. அது முடியரசுக் காலம்; இது குடியரசுக் காலம். எழுத்தாளர்கட்கும் வாக்குரிமை யுண்டன்றோ?

‘நமக்குத் தொழில் கவிதை என்ற பாரதியார்வாக்கின்படி, எழுத்தாளர்களும் மொழித் தொழிலாளர்களே. அவர்கள் தங்கள் சிந்தனைத்தொழில்எழுது தொழிலுக்குத்தக்கவருவாய் பெற்றுத் தம் பொருட்காலில் நிற்கவேண்டும். அப்போதுதான் சந்தை நோக்கமும் தொழுநோயுமின்றிச்சிந்தனையுரிமையோடு எழுத்துப் பிறக்கும். எழுத்தாளிகளைச் சொல்லேருழவர்' என்று உருவகஞ் செய்வர் திருவள்ளுவர்.எவ்வளவு பொருத்தம். பொருளாதாரத்தில் நம்நாட்டு ஏருழவர்களின் கதிதான் இன்று நம் எழுத்துழவர்களின் கதியும்.

வீட்டு நூலகம்

ஐந்து கோடித் தமிழர் தொகை இருந்தும்,ஆயிரம் படிகள் விற்பதற்கு மாமாங்கம் ஆகின்றது. வாங்காற்றல் மக்களிடம் இல்லை என்று சொல்லுதற்கில்லை. எத்துணையோ புதுக் கோலங்கட்கும் கேளிக்கைகட்கும் தலைகால் தெரியாமல் செலவு செய்து கொண்டுதான் இருக்கின்றார்கள். நூல்கள் வாங்கும் அறிவுப் பழக்கத்தை மக்களிடம் பரப்பவேண்டும். குடும்ப நலத்திட்டத்துக்கு எவ்வளவு பறைப்பு நடக்கின்றது? இரண்டே பெறுக இனிதே வாழ்க, அதிகம் பெறாதே அவதிப்படாதே நாமிருவர் நமக்கொருவர்; ஒன்று பெற்றால் ஒளிமயம் அளவோடு பெற்று வளமோடு வாழ்க;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்_சாறு.pdf/15&oldid=509735" இலிருந்து மீள்விக்கப்பட்டது