பக்கம்:இலக்கியச் சாறு.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152

வ.சுப. மாணிக்கனார்



என்று தமிழ்க்கடலாரே சிறைப்பேற்றை மதிக்கின்றார். சிறைத்துயர் என்று பதிகத் தலைப்பிடாமல், சிறைவாழ்வு என்று தலைப்பிட்டிருத்தலின் இராய.சொ. விற்குச் சிறை தமிழ்நிறையாக அமைந்தது. வேலூர் அரண்மனை மேவிய நாளென்’ (185) என்று எட்டடி கொள் சிற்றறையை அரண்மனையாகக் காண்குவர். தாம் வதிந்த வறட்டுமலை வேலூர்ச் சிறையை அரண்மனையாக மதிக்கும் இராய.சொ. அடிகள் தம் தெய்வக் காந்தி அடைபட்டிருந்த ஏர்வாடார் சிறையை ஏர்வாடாக் கோவிலுறை எம்மான்’ என்று போற்றித் தொழுவது எத்துணைப் பொருத்தம்! ஏர்வாடாக் கோவில் என்ற தொடர் எவ்வளவு சிறைப்பட்டிருந்தாலும், அழகு குன்றாத கோவில் என்று மற்றொரு பொருள்படுகிறதன்றோ? விடுதலைக்களம் புக்க இந்தியத் தலைவர்களுக்குப் புகழ் பயந்தது சிறைக்களம் ஆதலின் புலவர் இராய.சொ.சிறையை மதித்தே பாடுகின்றார்; மலிந்த புகழ் வேலூர்ச் சிறை (182), சேண்புகழ் கொண்ட ஏர்வாடாச் சிறை (185) என்று பாடிப் போதுவர். சிறையில் பட்டுச் சிறையையே நினைத்துப் பாடிய பழக்கத்தால், இராய.சொ.சிறையை மறக்க முடியவில்லை.

யாரும்நிகர் இல்லாத காந்திதனைத் திருக்குறளோ டிசைவுகண்டு நேரிசைவெண் பாவொருநூற் றிருபத்தைந் தாயமைத்து

- நெஞ்சிலன்னான்

சீருருவை அகலாது சிறை வைத்த ராய சொக்கலிங்கன் (பக்.55)

அரசு துறந்திருந்த இளங்கோவடிகள் குணவாயிற் கோட்டத்தில் அமர்ந்து சிலப்பதிகாரம் பாடியாங்கு, நாட்டு விடுதலைப் போராடிய இராய. சொ.அடிகள் வேலூர்ச் சிறையில் தங்கிக்காந்திக்கவிதைகளைப் பாடினர்.இரா.சொ.வின் ஒராண்டுச் சிறை வாழ்வையும் அக்குறுகிய பருவத்திற்குள் சிறைவயல் தந்த தமிழ் யாணரையும் நினைக்குங்காலை, பல்லாண்டு சிறையிருந்திருப்பரேல் காந்திக் காப்பியம் விளைந்திருக்குமே! ஆயிர விளக்கேந்திய திருமகள் வீடணன் மனைபுகுவதாக நற்கனா கண்டு கொண்டிருந்த போது துயில் எழுப்பி விட்டாயே என்று கவன்ற திரிசடைக்கு, கனாவின்