பக்கம்:இலக்கியச் சாறு.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியச் சாறு 153

குறையைக் காண மறுபடியும் தூங்குக என்று அன்னை சீதை இருகை கூப்பினாளாம் என்பது நினைவிற்கு வருகின்றது. வள்ளுவமணம் -

காந்தியை எண்ணும் போதெல்லாம் வள்ளுவர் நினைவே இராய. சொ.வின் மனத்தகத்து எழுகின்றது. பொய்யில் புலவரின் அறங்கள் மெய்யே என்று இலக்கியமாக வாழ்ந்து காட்டியவர் காந்தித் தோன்றல் என்பது அவர்தம் முடிவு. மேலும்பிள்ளைத்தமிழின் சிறுதேர்ப்பருவத்தில் வள்ளுவரோடு காந்தியை ஒப்பிட்டு, தகுதியுடை நீ எங்கள் தண்மையோடு இனிமை சாரும், தெள்ளு தமிழ் வள்ளுவனார் திருவரவு என்று இயம்பிடலாம்' என்று முடிப்பதனால் வள்ளுவனாரே காந்தியாகப் பிறந்தார் என்று காட்டுவர் இராய சொ. அவ்வாறே அன்னை கத்தூரியை வாசுகியாகவும் காண்பர்.

காந்திக் கவிதையில் வள்ளுவனமணம் பரவாத இடமில்லை. திருக்குறட்கு வரலாறு காட்டும் சோமேசர் முதுமொழி வெண்பா போன்ற நூல்கள் முன்னரே பலவுள. இந்நூல்களில் ஒவ்வொரு குறட்கும் பலர்தம் வாழ்க்கைச் செயல்கள் இலக்கியமாகக் காட்டப்பட்டுள்ளன. காந்தியும் வள்ளுவரும்’ என்ற இராய.சொ. வின் கவிதைப் பகுதியில் எல்லாக் குறட்களுக்கும் காந்தி ஒருவரின் வாழ்க்கை வரலாறுகளே காட்டாகின்றன. தமிழிலக்கிய வரலாற்றில் இஃது ஒரு புதுமுறை. மேலும் ‘காந்தியும் வள்ளுவரும் என்ற நூற்பகுதி உரையிடையிட்டபாட்டுடைச் செய்யுளாக அமைந் திருக்கின்றது. செய்யுள் யாத்த இராய.சொ.அவர்களே வேண்டிய விளக்கத்தை உரைநடையில் எழுதியுள்ளனர். வெண்பாவாலும் விளக்கத்தாலும் திருக்குட்கே சில புதிய கருத்துக்களை அறிந்து கொள்கின்றோம். பின்னிரண் டடித் திருக்குறளுக்கு ஏற்ப, முன்னிரண்டடி குறள் பாடும் புலவன் தனிச் சொல்லும் சேர்த்துப் பாடவேண்டும். யாப்பு நிறைவுக்காகப் பாடுபவன் யாப்பறி புலவன் ஆகின்றான். இத்தனிச் சொல்லை ஒப்பற்ற சொல்லாக நயம்படத் தொகுப்பவன் பொருளறிபுலவன் ஆகின்றான்.125 வெண்பா